மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 அக் 2021

பிறந்தநாளிலேயே இறந்த வீரபாண்டி ராஜா- சோகத்தில் திமுக

பிறந்தநாளிலேயே இறந்த வீரபாண்டி ராஜா- சோகத்தில் திமுக

திமுகவின் சேலம் மாவட்ட முக்கியப் பிரமுகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வீரபாண்டி ராஜா இன்று (அக்டோபர் 2) காலை ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் உயிரிழந்தது திமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் இன்று அவரது பிறந்தநாள் என்பது சோகத்தை அதிகமாக்கியுள்ளது.

மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனான வீரபாண்டி ராஜா, சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருந்தார். தலைமைக்கு கள எதார்த்தத்தை தயங்காமல் சொல்லும் அதிரடியான செயல்பாடு நிறைந்தவர் வீரபாண்டி ராஜா. இந்நிலையில் 2019 டிசம்பரில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 2020 பிப்ரவரி 3 ஆம் தேதி வீரபாண்டி ராஜா மாவட்டப் பொறுப்பாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு திமுகவின் தேர்தல் பணிக்குழு செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போதும் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இன்று (அக்டோபர் 2) தனது 58 ஆவது பிறந்தநாளை ஒட்டி புதிய பஸ் நிலையம் அருகே இருக்கும் கட்சி அலுவலகத்தில் உள்ள தனது தந்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, தொண்டர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டு காரில் ஏறச் சென்றிருக்கிறார்.

அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவ்வப்போது அவருக்கு லோ பிபி காரணமாக மயக்கம் ஏற்படுவதை அறிந்த ராஜாவின் நண்பர்கள் உடனடியாக அவரை காரில் ஏற்றி அருகிலுள்ள தனியார் மருத்துவனைக்கு வேகமாக அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால் அங்கே செல்வதற்குள் ராஜாவின் உயிர் பிரிந்துவிட்டது. மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

வீரபாண்டி ராஜாவின் பிறந்தநாளுக்காக பல்வேறு ஏற்பாடுகளை செய்திருந்த அவரது ஆதரவாளர்கள் இந்தத் தகவலால் அதிர்ச்சியடைந்து அவரது இல்லத்தின் முன் திரண்டு வருகின்றனர்.

வேந்தன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 2 அக் 2021