மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 அக் 2021

ரேஷன் கடைகளில் பனை வெல்லம்!

ரேஷன் கடைகளில் பனை வெல்லம்!

இனி, ரேஷன் கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவையில் முதன் முறையாக வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பனை மரம் மற்றும் அது சார்ந்த பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும், பனை மரத்தை வெட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறவேண்டும்; பனைவெல்லம் உள்ளிட்ட பொருட்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகள் மற்றும் ஒரு லட்சம் பனங்கன்றுகளை முழு மானியத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில்,தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “பொது விநியோக துறையின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் பனை வெல்லம் விநியோகம் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி கூட்டுறவு சங்கங்களில் பதிவாளர், பனை வெல்லத்தின் பேக்கிங், எம்ஆர்பி விலை அச்சிடுதல், பேக்கிங் தேதி, காலாவதி தேதி மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சான்றிதழ் எண் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.

ரேஷன் கடைகளில் 100 கிராம் முதல் 1 கிலோ வரை பனைவெல்லம் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பனை வெல்லத்தை விருப்பப்பட்ட பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம்; பனைவெல்லத்தை வாங்கிதான் ஆக வேண்டும் என பணியாளர்கள் பொதுமக்களை கட்டாயப்படுத்தக் கூடாது. நியாய விலைக்கடைகளில் பனை வெல்லம் விநியோகம் செய்யப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் உதவியுடன் மாவட்ட மற்றும் தாலுகா மற்றும் கிராமங்களில் விளம்பர பிரச்சாரம் செய்து கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 2 அக் 2021