மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 அக் 2021

எடப்பாடி, சசிகலாவை விசாரிக்கக் கோரிய வழக்கு: போலீஸுக்கு அவகாசம்!

எடப்பாடி, சசிகலாவை விசாரிக்கக் கோரிய வழக்கு: போலீஸுக்கு அவகாசம்!

கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவை விசாரிக்கக் கோரிய வழக்கில் 4 வாரம் அவகாசம் வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கேட்கப்பட்டதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.

கொடநாடு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி, முன்னாள் மாவட்ட ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்பி முரளி ரம்பா, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தித் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘கொடநாடு எஸ்டேட்டில் காணாமல்போன பொருட்கள் எவை என்பது பற்றி சசிகலா, இளவரசிக்குத் தான் தெரியும். கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்பு பற்றி சயான் பேசி உள்ள நிலையில் அதன் தீவிரத்தைப் பரிசீலிக்க நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டது. புலன் விசாரணைக் குழு வெளிப்படையான விசாரணை மேற்கொள்ளாமல் முக்கிய குற்றவாளிகளை விட்டுவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று (அக்டோபர் 1) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், இவ்வழக்கில் பதிலளிக்க நான்கு வாரக் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 1 அக் 2021