மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 அக் 2021

தாம்பரம், ஆவடி: புதிய காவல் ஆணையர்கள்!

தாம்பரம், ஆவடி: புதிய காவல் ஆணையர்கள்!

சென்னை மாநகரக் காவல்துறை மூன்றாகப் பிரிக்கப்பட்டது. அதன்படி புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகத்திற்குச் சிறப்பு அதிகாரிகளைத் தமிழக அரசு இன்று நியமித்தது.

கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி, சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தாம்பரம், ஆவடியைத் தலைமையிடமாகக் கொண்டு தனித்தனி புதிய காவல் கமிஷனர் அலுவலகங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னையில் 12 காவல் மாவட்டங்களில் 130க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ளன. சென்னையில் நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப கூடுதல் காவல் நிலையங்களும் ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டது. அதன்படி சென்னை பெருநகர காவல்துறை எல்லையை மாநகராட்சிகளின் அடிப்படையில் மூன்றாகப் பிரித்து ஆவடியிலும் ,தாம்பரத்திலும் புதிய காவல்துறை ஆணையரகங்கள் அமைக்கப்படுவதாக முதல்வர் அறிவித்தார்.

இந்நிலையில் புதிய காவல்துறை ஆணையரகங்களுக்குச் சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு வெளியிட்டது.

தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

“நிர்வாகம் (சென்னை) ஏடிஜிபியாகப் பதவி வகித்து வரும் எம்.ரவி, தாம்பரம் மாநகரக் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அமலாக்கப் பிரிவு (சென்னை) ஏடிஜிபியாகப் பதவி வகித்து வரும் சந்தீப் ராய் ரத்தோர், ஆவடி மாநகரக் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதாரக் குற்றத் தடுப்புப்பிரிவு (சென்னை) ஐஜியாகப் பதவி வகித்து வரும் அபின் தினேஷ் மோதக், அடுத்த உத்தரவு வரும் வரை அப்பிரிவின் ஏடிஜிபி பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய ...

6 நிமிட வாசிப்பு

ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

8 நிமிட வாசிப்பு

அண்ணாமலையின் ஆதாரத்துக்கு தொடர் பதிலடி கொடுத்த அமைச்சர்!

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

5 நிமிட வாசிப்பு

விஜயபாஸ்கர் பினாமிகளின் வங்கி லாக்கர்களுக்கு சீல்?

வெள்ளி 1 அக் 2021