மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 அக் 2021

‘நியாயமான முறையில் தேர்தல்’ : அறிவுறுத்திய நீதிமன்றம்!

‘நியாயமான முறையில் தேர்தல்’ : அறிவுறுத்திய நீதிமன்றம்!

உள்ளாட்சித் தேர்தல் நியாயமான முறையில் நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வரும் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார்.

ஒன்றிய அரசு பணியாளர்களைத் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும், பறக்கும் படைகளை அமைத்து பணப் பட்டுவாடாவைத் தடுப்பதுடன் தேர்தல் பணிக்கு மத்திய ரிசர்வ் படையை அமர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கொடுத்த மனுவை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

இவ்வழக்கு குறித்து, அக்டோபர் 1ஆம் தேதி பதிலளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ஒரு மாவட்டத்தில் 20 சதவிகித வாக்கு சாவடிகளில் கண்காணிப்பு கேமரா மற்றும் இணையதள நேரலை வசதி ஏற்படுத்தப்படும். ஸ்ட்ராங் ரூம், வாக்கு எண்ணிக்கை மையங்கள் அடையாளம் காணப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் மட்டும் வீடியோ பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “ஒரு மாவட்டத்தில் 20 சதவிகித வாக்குச்சாவடிகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா மற்றும் இணையதள நேரலை வசதி செய்ய வேண்டும். வாக்குச்சாவடிகளில் தொடர்ந்து வீடியோ பதிவு செய்ய வேண்டும். ஸ்ட்ராங் ரூம்களுக்கு உள்ளேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். தேர்தல் பார்வையாளர்களின் விவரங்களை பொது மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும்” என்றார்.

இதற்குப் பதிலளித்து ஆஜரான, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம்,

“ரகசியமாகச் செயல்படக்கூடிய தேர்தல் பார்வையாளர்களை அடையாளப்படுத்த முடியாது. ஸ்ட்ராங் ரூமிற்கு வெளியே கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுவதால் உள்ளே பொருத்த தேவையில்லை. முடிந்த அளவுக்கு அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் அதிமுகவின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் ஒப்புதல் தெரிவித்ததை நீதிபதிகள் பதிவு செய்தனர். மேலும் எந்த புகாருக்கும் இடம் அளிக்காமல் அதிகாரிகள் நியாயமாகத் தேர்தல் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.

-பிரியா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

வெள்ளி 1 அக் 2021