மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 அக் 2021

சமூக நீதியை முன்னிறுத்தும் தமிழகம்: முதல்வர் ஸ்டாலின்

சமூக நீதியை முன்னிறுத்தும் தமிழகம்: முதல்வர் ஸ்டாலின்

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்டோபர் 1) பாராட்டு விழா நடத்தப்பட்டது.

யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் குடிமைப் பணிகளுக்கான தேர்வை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் 716 பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தமிழகத்திலிருந்து 36 பேர் தேர்வாகினர்.

இதில் 16 பேர் அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.

இந்நிலையில் இவர்களுக்குப் பாராட்டு விழா அண்ணா மேலாண்மை நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அரசு பணி என்பது தமிழக இளைஞர்களுக்கு விருப்பமான பணி. மேலும் இந்திய ஆட்சி பணி என்பது இளைஞர்களின் கனவு.

அனைத்து இளைஞர்களும் சிறுவயது முதலே, முயன்று, உழைத்து, கடுமையாகப் பாடுபட்டு எழுதக் கூடிய புரட்சி இது. இந்த தேர்வுக்காகக் கல்லூரி வாழ்க்கையிலேயே கவனம் செலுத்திப் படிக்க கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.

கடுமையான போட்டியாக இந்த தேர்வு எப்போதும் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் உயர்ந்த பணிகளுக்கு இத்தேர்வின் மூலம் தேர்ச்சி பெறக்கூடியவர்கள், நிர்வாகத்தைச் செம்மையாக வழிநடத்தக் கூடிய பெரிய பொறுப்பு இதுவாகும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை எப்போதும் சமூக நீதியை முன்னிறுத்தும் மாநிலமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களுக்காகப் போராடுவதை தங்கள் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு இருந்தார்கள்.

வசதி படைத்தவர்கள் மட்டுமே எழுத முடியும் என்றிருந்த இந்த தேர்வைக் கடைக்கோடியில் இருப்பவர்களும் எழுதவேண்டும் என்பதற்காக தமிழகத்தில் பட்டியல் இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்குப் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட , இதர பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்காக இன்னொரு சிறப்பு மையம் தொடங்கப்பட்டது. இந்த இரண்டு மையத்தையும், 2000ஆம் ஆண்டு கலைஞர் ஒருங்கிணைத்து, அகில இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையம் என்று பெயரிட்டு அண்ணா மேலாண்மை நிலையத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.

மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன் மாதிரியாக இந்த மையம் உள்ளது. மேற்கு வங்கம், தெலங்கானா மாநிலங்கள் எல்லாம் இந்த மையம் குறித்து விசாரித்துக் கொண்டிருக்கின்றன. இட ஒதுக்கீடு முறையில் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் இங்கு வாய்ப்பளிக்கப்படுகிறது

இந்த மையத்தில் படித்த 16 பேர் தற்போது தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. குடிமைப் பணி அலுவலர்கள் சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றங்கள் என அரசின் மூன்று தூண்களில் பணியாற்ற உள்ளனர். அரசின் திட்டங்கள், சட்டங்களை ஏழை – எளிய மக்களிடம் கொண்டு சேர்க்கும் மிகப்பெரிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. இது நுழைவு வாயில்தான், மாளிகை அல்ல. இனிதான் அதிகம் உழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 1 அக் 2021