மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 செப் 2021

தடுத்து நிறுத்தப்பட்ட அமைச்சர்: உயரதிகாரிகள் சமாதானம்!

தடுத்து நிறுத்தப்பட்ட அமைச்சர்: உயரதிகாரிகள் சமாதானம்!

சென்னை விமான நிலையத்தில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ் ஒருவரால் தடுத்து நிறுத்தப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

அமைச்சா் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், இன்று காலை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்வதற்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு வந்தார்.

அரசு முறை பயணமாக வந்த அவரை அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ் ஒருவர் சோதனை செய்தார். அவரது பையை சோதனை செய்ததில் இரண்டு லேப்டாப்கள் இருந்தன.

உடனே இரண்டு லேப்டாப்கள் எடுத்துச் செல்லக் கூடாது என அவர் அனுமதி மறுத்தார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நான் நிதியமைச்சர், அரசு ரீதியாக பயணம் மேற்கொள்கிறேன். இரண்டு லேப்டாப்கள் எடுத்துச் செல்லக்கூடாது என ஏதேனும் விதி உள்ளதா? என அமைச்சர் கேள்வி எழுப்பினார். உடனே அந்த அதிகாரி, இந்தியும், ஆங்கிலமும் கலந்தவாறு பதிலளித்து, உள்ளே செல்ல அனுமதி மறுத்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பின்னர் அங்கே வந்த உயரதிகாரிகள், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் மன்னிப்புக் கேட்டு உள்ளே அனுமதித்தனர்.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்த போது, “விமான நிலையத்தில் மாநில பிரிவு, மத்திய பிரிவு என பாதுகாப்பு படையினர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். வழக்கமாக அமைச்சர்கள் வந்தால், மாநில பாதுகாப்பு பிரிவினர் மத்திய பிரிவிடம், ‘இதுபோன்று அமைச்சர் வருகிறார்’ என்று தகவல் தெரிவிப்பார்கள். அவர்களும் செக் செய்து அனுப்பி வைப்பார்கள்.

இந்நிலையில் இன்று லக்கேஜை ஸ்கேன் செய்யும் இடத்தில் இருந்த அதிகாரிக்கு, பழனிவேல் தியாகராஜன் அமைச்சர் என்று தெரியாமல் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.பி. இருவரும், ‘மாநில அமைச்சர் என அவருக்கு தெரியவில்லை. அதனால் தான் இதுபோன்று நடந்துவிட்டது’ என கூறி அமைச்சரிடம் மன்னிப்பு கேட்டு அனுப்பி வைத்தனர். மாநில பிரிவு போலீசார் சரியான தகவலை தெரியப்படுத்தவில்லை ” என்றனர்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 30 செப் 2021