மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 30 செப் 2021

பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்!

பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்!

ஜோலார்பேட்டையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளரை சஸ்பெண்ட் செய்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் தீவிரமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில், அரசு ஊழியர்கள் எந்த கட்சிக்கும் ஆதரவாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபடக் கூடாது என்ற விதிமுறை உண்டு. இது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனாலும், சிலர் விதிமுறையை மீறி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆறு ஒன்றியங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் நான்கு பதவிகளுக்கு 6,307 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், ஜோலார்பேட்டை ஒன்றியம் சோமநாயக்கன்பட்டி ஊராட்சிச் செயலாளராக சுந்தரமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் குறிப்பிட்ட அரசியல் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். இதற்கான ஆதாரங்களுடன் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவிடம் புகார் அளித்தார்.

உடனடியாக, ஊராட்சி செயலாளர் சுந்தரமூர்த்தியை சஸ்பெண்ட் செய்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசு ஊழியர்கள் எந்த ஒரு காரணத்துக்காகவும், அரசியல் கட்சிக்கு ஆதரவாகவோ, வேட்பாளர்களுக்கு ஆதரவாகவோ தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

-வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

வியாழன் 30 செப் 2021