மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 செப் 2021

உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைக்க முடியாது: நீதிமன்றம்!

உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைக்க முடியாது: நீதிமன்றம்!

ஊரக உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளி வைக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலுக்காக வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் தவறுகள் இருப்பதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் இச்சிபுத்தூர், கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.

அதில் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா இச்சிபுத்தூர் கிராமத்தில் உள்ள 8வது வார்டு வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்தி புது வாக்காளர் பட்டியல் வெளியிடும் வரை 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 29) தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், 8வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் மற்ற வார்டில் உள்ள பெண்கள், இறந்தவர்கள் பெயர்கள் என 120 பேரின் பெயர்கள் தங்களது வார்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இவற்றைத் திருத்தாமல் தேர்தல் நடத்தக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள் அக்டோபர் 6ஆம் தேதி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர்கள் தவறுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது என்ற காரணத்திற்காக 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என்று மறுப்பு தெரிவித்தனர்.

அதோடு வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை விரைவில் திருத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே . ரமேஷ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்குத் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் 4 மாதம் அவகாசம் வழங்கியுள்ளதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் இம்மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

-பிரியா

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

புதன் 29 செப் 2021