மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 செப் 2021

காவிரி: இருமாநிலங்களும் நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும்!

காவிரி: இருமாநிலங்களும் நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும்!

காவிரி விவகாரத்தில் தமிழ்நாடும், கர்நாடகாவும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்க வேண்டும் என்று கர்நாடகா கிராமப்புற உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநில முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய கிராமப்புற உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சருமான ஈஸ்வரப்பா இன்று(செப்டம்பர் 29) மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஈஸ்வரப்பா, ”கர்நாடகாவில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசனிடம் ஆசி பெறுவதற்காக மதுரை வந்தேன். என்னுடைய பயணத்துக்கு வேறு எந்த காரணமும் கிடையாது. இங்கு அடிக்கடி நான் வருவது வழக்கமானதுதான்” என்று கூறினார்.

காவிரி பிரச்சினை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,” காவிரி நதிநீர் பிரச்சினை அரசியல் பிரச்சினையாக மாற்றப்பட்டிருக்கிறது. கர்நாடகாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. இரு மாநில மக்களும் சகோதர-சகோதரிகளாக உள்ளனர்.

காவிரி விவகாரம் அரசியல்வாதிகளால் அரசியலாக்கப்படுகிறது. இரு மாநிலங்களும் காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பை கடைப்பிடிக்க வேண்டும். சில நபர்கள் காவிரி விவகாரத்தில் வேண்டுமென்றே பிரச்சினையை உருவாக்குகின்றனர். தமிழ்நாடும், கர்நாடகாவும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்க வேண்டும். காவிரி தூய்மையாக உள்ளது. காவிரி தமிழ்நாடு விவசாயிகளையும், கர்நாடக விவசாயிகளையும் ஆசீர்வதிக்கும்” என்று கூறியவர், நிருபர்களின் மேகதாது அணை குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமலேயே சென்றுவிட்டார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

புதன் 29 செப் 2021