மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 செப் 2021

கிராம சபைக் கூட்டம்: கே.எஸ்.அழகிரியின் வேண்டுகோள்!

கிராம சபைக் கூட்டம்: கே.எஸ்.அழகிரியின் வேண்டுகோள்!

ராஜீவ்காந்தியின் கனவை நிறைவேற்றும் வகையில், அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கிராம சபைக் கூட்டத்தை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி வருகிற அக்டோபர் 2ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிற 9 மாவட்டங்களை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கிராம சபைக் கூட்டத்தை பல கட்சிகள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது தொண்டர்களுக்கு வேண்டுகோள் ஒன்று விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று(செப்டம்பர் 29) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய, மாநில அரசுகளுக்கு அடுத்தகட்டமாக, அடித்தட்டு மக்களோடு நேரடித் தொடர்புள்ள அமைப்பாக பஞ்சாயத்து ராஜ் விளங்குகிறது. பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் காந்தி கண்ட கனவின்படி, சுயாட்சி அதிகாரம் கொண்ட குடியரசாக செயல்பட வேண்டும் என்பதைச் செயல்படுத்தியவர் ஜவஹர்லால் நேரு.

காலப்போக்கில் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் எதிர்பார்த்த பலன் கிடைக்காத நிலையில் செயல்பட்டு வந்தது. இதை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டுமென்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.

இதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பலதரப்பட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளோடு கலந்து பேசி, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுத்தார். அதன் பலனாக, அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு பஞ்சாயத்துராஜ் நகர் பாலிகா ஆட்சிமுறை அமலுக்கு வந்தது.

பஞ்சாயத்துராஜ் ஆட்சி முறையின் பொதுக்குழுவாகவும், அதிகாரமிக்க அமைப்பாகவும் விளங்குவது கிராம சபை. இங்கு எடுக்கின்ற முடிவின்படிதான் கிராமப் பஞ்சாயத்து செயல்பட முடியும். கிராமப் பஞ்சாயத்துகளுக்கு அடித்தளமாக விளங்கும் கிராம சபைகளை ஒவ்வொரு ஆண்டும் மகாத்மா காந்தி பிறந்த நாள், சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய மூன்று நாட்களிலும் கட்டாயம் கூட்ட வேண்டும் என்பது சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும்.

கடந்த ஆட்சியாளர்கள் கிராம சபையைக் கூட்டவிடாமல் முடக்கி வந்தனர். தற்போது, திமுக ஆட்சி அமைந்த பிறகு, முதல் முறையாக காந்தி பிறந்த அக்டோபர் 2 ஆம் தேதியன்று கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டுமென்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதைத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்.

எனவே, காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாகப் பங்கேற்று காந்தி, நேரு, ராஜீவ் காந்தி ஆகியோர் கண்ட கனவை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

புதன் 29 செப் 2021