மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 செப் 2021

ரூ.1000 கோடிக்கும் அதிகமான சொத்துகள் மீட்பு: சேகர்பாபு

ரூ.1000 கோடிக்கும் அதிகமான சொத்துகள் மீட்பு: சேகர்பாபு

திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இதில் ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துகளை மீட்க ​இந்துசமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்து வந்தது.

இதுதொடர்பாக சென்னை கீழ்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “அறநிலையத் துறை ஆணையர் மற்றும் செயலாளர் , இணை ஆணையர் உதவியோடு நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. தற்போதே மீட்பு மதிப்பீடு 1000 கோடியை தாண்டிவிட்டது. இந்து சமய அறநிலையத்துறை கணக்கின்படி இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்படும்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சொந்தமாக 150 கிரவுண்டுகளுக்கு மேலான நிலம் உள்ளது. இதில் 49 கிரவுண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. சட்டப்படி ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் 60 கிரவுண்டுகள் மீட்கப்படும். 9 ஏக்கர் அளவிலான மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 300 கோடி ரூபாயாகும். இறை சொத்து இறைவனுக்கே என்னும் தாரக மந்திரத்தோடு, இது போன்ற ஆக்கிரமிப்புகளில் உள்ள நிலங்களை தினந்தோறும் மீட்டு வருகிறோம்” என்று தெரிவித்தார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

புதன் 29 செப் 2021