மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 29 செப் 2021

அமைச்சர்கள் தரவரிசை: திருப்திகரம், கவனம் தேவை!

அமைச்சர்கள் தரவரிசை: திருப்திகரம், கவனம் தேவை!

கொரோனா தடுப்பூசி செலுத்துதலில் தமிழக மாவட்டங்களின் செயல்பாடுகளை தலைமைச் செயலாளர் தர வரிசைப்பட்டியலாக நேற்று (செப்டம்பர் 28) வெளியிட்டார்.

தலைமைச் செயலாளர் வெளியிட்டாலும் முதல்வரின் ஒப்புதலுக்குப் பிறகே இது வெளியிடப்பட்டிருப்பதால் அந்தந்த மாவட்ட அமைச்சர்களின் செயல்பாட்டுக்கான மதிப்பீடாகவும் இந்த தரவரிசைப் பட்டியல் அமைந்திருக்கிறது.

அந்த வகையில் மோசமான செயல்பாடுகள் கொண்ட அமைச்சர்களின் பட்டியலையும், எக்சலன்ட், வெரிகுட், குட் என பாராட்டப்பட்ட மாவட்ட அமைச்சர்களின் பட்டியலையும் தனித் தனியே பார்த்தோம்.

இந்நிலையில் திருப்திகரம், கவனம் தேவை என்ற தரவரிசைகளில் இருக்கும் சுகாதார மாவட்டங்களையயும், அவற்றுக்கான அமைச்சர்களையும் பார்க்கலாம்.

எக்சலன்ட், வெரி குட், குட் என மூன்று நிலைகளில் 14 சுகாதார மாவட்டங்கள் இடம் பிடித்துள்ளன அதையடுத்து திருப்திகரம், கவனம் தேவை என இரு நிலைகளில் முறையே 10, 8 மாவட்டங்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

திருப்திகரம் (சுகாதார மாவட்டங்கள்)

பெரம்பலூர், பூந்தமல்லி, ஆத்தூர், தென்காசி. நாகப்பட்டினம், விருதுநகர், பழனி, திருவாரூர், சேலம், மதுரை ஆகியவை தடுப்பூசி இயக்கத்தைப் பொறுத்தவரை ஜஸ்ட் பாஸ் செய்துள்ளன.

இவற்றில் ஆத்தூர், தென்காசி, நாகப்பட்டினம், திருவாரூர், சேலம் ஆகியவை சொந்த அமைச்சர்களைப் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

பெரம்பலூர்- அரியலூர் எஸ். எஸ், சிவசங்கர், பூந்தமல்லி- ஆவடி நாசர், விருதுநகர் (கே.கே.எஸ்.எஸ். ஆர்- தங்கம் தென்னரசு), பழனி (ஐ. பெரியசாமி), மதுரை- பிடிஆர் தியாகராஜன் ஆகிய அமைச்சர்களின் பங்கும் இந்த திருப்திகர செயல்பாட்டில் இருக்கிறது.

கவனம் தேவை

இதையடுத்து கவனம் தேவை என்ற பட்டியலில் 8 சுகாதார மாவட்டங்கள் இடம் பிடித்துள்ளன.

தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை தூத்துக்குடி, திருநெல்வேலி, ராணிப்பேட்டை, செய்யாறு, பரமக்குடி ஆகியவைதான் கவனம் தேவை என்ற எச்சரிக்கையைப் பெற்றுள்ளன.

இதில் தஞ்சாவூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் இல்லை. சிவகங்கைக்கு பெரியகருப்பன், தூத்துக்குடிக்கு கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ராணிப்பேட்டைக்கு காந்தி, செய்யாறுக்கு திருவண்ணாமலை மாவட்ட வேலு, பரமக்குடிக்கு ராஜகண்ணப்பன் ஆகிய அமைச்சர்கள் கவனம் தேவை என்ற எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களில் வேலு, கண்ணப்பன், காந்தி ஆகியோர் மோசமான செயல்பாடு என்ற பட்டியலுக்குள்ளும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது.

ஏற்கனவே அமைச்சர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கும் முதல்வர் ஸ்டாலின், “உங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுகவைச் சேர்ந்த மற்ற சட்டமன்ற உறுப்பினர்களும் அமைச்சர் ஆவதற்கு தகுதியோடு இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்த்து செயல்படுங்கள்”என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்த நிலையில்தான் தலைமைச் செயலாளர் வெளியிட்ட இந்த தடுப்பூசி பெர்ஃபாமென்ஸ் பட்டியல் என்பது செயல்படும் அமைச்சர்களுக்கு ஊக்க ஊசியாகவும், செயல்படாத அமைச்சர்களுக்கு எச்சரிக்கை மருந்தாகவும் அமைய வேண்டும்.

-வேந்தன்

எக்சலன்ட்- வெரி குட் அமைச்சர்கள் இவர்கள்தான்!

மோசமான செயல்பாடு கொண்ட அமைச்சர்கள்: முதல்வர் ஸ்டாலின் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்!

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 29 செப் 2021