மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

சொத்துக் குவிப்பு வழக்கு: விஜயபாஸ்கருக்குச் சம்மன்!

சொத்துக் குவிப்பு வழக்கு: விஜயபாஸ்கருக்குச் சம்மன்!

போக்குவரத்துத் துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியைப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இந்நிலையில் அவர் மீது, லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்குப் பதிவு செய்தது.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சென்னை, கரூர் உட்பட விஜயபாஸ்கருக்குச் சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் 25.56 லட்சம் ரூபாய் ரொக்கம், சொத்து ஆவணங்கள் , பணப்பரிவர்த்தனை ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தது.

விஜய்பாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக 55 சதவிகிதம் சொத்துகள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சொத்துக் குவிப்பு தொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த அவரை நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

நாளை மறுநாள் செப்டம்பர் 30ஆம் தேதி ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது . அதுபோன்று விஜயபாஸ்கரின் மனைவி விஜயலட்சுமி மற்றும் சகோதரர் சேகர் ஆகியோர் மீதும் சொத்துக் குவிப்பு வழக்குப் பதியப்பட்டுள்ளதால் அவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக, 'எனக்குச் சொந்த வீடே கிடையாது' என்றும் பொய் வழக்குகளைப் போட்டு திமுக அரசு பழிவாங்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது என்றும் விஜயபாஸ்கர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

செவ்வாய் 28 செப் 2021