மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

விளம்பரத்திற்காக அம்மா கிளினிக் : அமைச்சர் மா.சு

விளம்பரத்திற்காக அம்மா கிளினிக் : அமைச்சர் மா.சு

அம்மா மினி கிளினிக் என்பது பெயரளவில்தான் இருந்தது; எந்த இடத்திலும் பயனளிக்கவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள மருத்துவப் பணிகள் கழக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்,” தமிழ்நாடு மருத்துவத் துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர விரும்பும் முதல்வர், அதுகுறித்தான அறிவுறுத்தல்களையும் எங்களுக்கு வழங்கி வருகிறார். மக்களைத் தேடி மருத்துவம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நாள்தோறும் 50,000 பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.

நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது இந்த துறையின் சார்பில் 110 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவைகளில் ஒன்றான ’கலைஞரின் வரும் முன் காப்போம்’ என்ற திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை (செப்டம்பர் 29) சேலத்தில் உள்ள வாழப்பாடி என்ற இடத்தில் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் ஆண்டுக்கு 1240 மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும்.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி ‘வருமுன் காப்போம்’ என்ற திட்டத்தை பூவிருந்தவல்லி அண்ணா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள், அந்த திட்டத்தை செயல்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டனர். மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர். பத்து ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் இருந்த ’வருமுன் காப்போம்’ திட்டம் மீண்டும் தொடங்கப்படவுள்ளது. பொது மருத்துவர், அறுவை சிகிச்சை, குடல் நோய், குழந்தை, காது, மூக்கு, தொண்டை, மனநல மருத்துவர் என 16 துறை சார்ந்த மருத்துவர்கள் முகாம்களில் பங்கேற்பார்கள்.

தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் தற்போது ஏழு மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகை ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மாணவர்களும், நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 மாணவர்கள் என மொத்தம் 850 மாணவர்கள் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் கட்டட பணிகள் சரிவர முடியவில்லை. அந்த பணிகள் முடிவடைந்த பின்பு, ஒன்றிய அரசு அலுவலர்கள் மீண்டும் ஆய்வு மேற்கொள்வார்கள்” என்று ணணகூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த மூன்று வாரங்களாக மெகா தடுப்பூசி முகாம்கள் சிறப்பான முறையில் நடைபெற்றது. அதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. நேற்று விடுமுறையை தொடர்ந்து இன்று வழக்கம்போல் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த வாரம் அக்டோபர் 2 ஆம் தேதி 12 ஆயிரத்து 500 கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகின்றன. தடுப்பூசி முகாம்களுக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கின்ற உள்ளாட்சிகளில் பணியாற்றி கொண்டிருக்கின்ற பணியாளர்கள், ஊழியர்கள் அனைவரும் கிராம சபை கூட்டங்களில் முழுமையாக ஈடுபடுகின்றனர். அதனால், அக்டோபர் 3ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது. அடுத்த வாரம் தடுப்பூசி முகாம் அமைக்கப்படும். இதுவரை அதிகபட்சமாக 40 ஆயிரம் தடுப்பூசி மையங்களை அமைத்துள்ளோம். அதனால், அக்டோபர் 10ஆம் தேதி 50 ஆயிரம் மையங்கள் மூலம் மெகா மெகா தடுப்பூசி முகாமை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

மேலும், ”அம்மா மினி கிளினிக்கிற்கு தற்போது அவசியம் இல்லை. முன்னாள் முதல்வர் கூட அம்மா மினி கிளினிக்தான் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்று ஒப்புதல் அளித்திருக்கிறார். சட்டப்பேரவையில் அம்மா மினி கிளினிக்குகள் பற்றி தெளிவாக கூறினேன். விளம்பரத்திற்காக செய்யப்பட்ட விஷயங்கள்தான். அம்மா மினி கிளினிக் என்பது பெயரளவில்தான் இருந்தது; எந்த இடத்திலும் பயனளிக்கவில்லை. அம்மா உப்பு, அம்மா காய்கறிகள் அங்காடி, அம்மா கூட்டுறவு அங்காடியில் மருந்து மாத்திரைகள், அம்மா அரிசி என்றெல்லாம் அறிவித்தார்கள். பிறகு நான்கு இடங்களில் ஆரம்பித்து போட்டோ எடுத்து செய்தியாக்கப்பட்டது. அதன்பிறகு இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. அதுமாதிரிதான், இந்த அம்மா கிளினிக்” என்று கூறினார்.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

செவ்வாய் 28 செப் 2021