மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

செவிலியர்கள் போராட்டம் : கமல்ஹாசன் ஆதரவு!

செவிலியர்கள் போராட்டம் :  கமல்ஹாசன் ஆதரவு!

பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்திந்து ஆதரவு தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் மூன்று கட்டங்களாக தற்காலிக பணிநியமன அடிப்படையில் செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டனர். முதல் மற்றும் மூன்றாம் கட்டமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி, சென்னை தேனாம்பேட்டையில்உள்ள மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க வளாகத்தில் இன்று காலை முதல் செவிலியர்கள் தொடர் உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று செவிலியர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

அப்போது பேசிய கமல்ஹாசன்,” உங்களின் குரல் தமிழகம் முழுவதும் கேட்க போகிறது. இது உண்மை. பிரித்தாள்வது என்பது நமக்கு புதிதல்ல. உங்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் கூட விடாமல் , அவரவர் இடத்திற்கு அனுப்பி வைத்துவிட்டால் இந்த குரல் இனி கேட்காது என்று நம்புகிறார்கள். அது அவர்களின் நம்பிக்கை. உங்கள் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்காகதான் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். இது நியாயமான,உரிமை போராட்டமாக நான் பார்க்கிறேன். கொரோனா காலத்தில் வந்தீர்கள், உதவி செய்தீர்கள். கொரோனா போய்விட்டது, நீங்களும் போங்கள் என்று சொல்வது அசட்டுத்தனம். கொரோனா இன்னும் போகவில்லை என்பது உலகறிந்த உண்மை.

கொரோனா காலத்தில் செவிலியர்கள் சேவையின் பலனாக பலர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதனால் இந்த நேரத்தில் செவிலியர்களின் பணி நமக்குத் தேவை. அதனால், அவர்களை பணியில் தக்க வைத்துக் கொள்வது அரசின் கடமை என்பதை அரசுக்கு பரிந்துரைக்கவே வந்துள்ளேன். ஒரு நல்ல அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்குமே தவிர, இருக்கும் வேலைவாய்ப்புகளை குறைக்க கூடாது. அரசு இவர்களின் போராட்டத்தை கவனமுடன் அணுகி கோரிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும். போராட்டத்தை ஒரு சுமூகமாக முடிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவே வந்துள்ளேன்” என்று கூறினார்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,செவிலியர்களின் போராட்டம் திமுகவிற்கு என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்பது தெரியவில்லை.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

செவ்வாய் 28 செப் 2021