மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

எம்.பி.மீது கொலைப் புகார்: விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி

எம்.பி.மீது கொலைப் புகார்: விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி

கடலூர் திமுக எம்பி ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி கம்பெனியில் ஊழியர் கோவிந்தராஜ் மர்ம மரணம் அடைந்த வழக்கில், சிபிசிஐடி போலீஸார் விசாரணையைத் துவங்கியிருக்கிறார்கள்.

பண்ருட்டி தாலுக்கா பணிக்கன்குப்பம் ஊராட்சியில் கெடிலம் ஆற்றங்கரை ஓரத்தில் முந்திரி காடுகள் மத்தியில் அமைந்துள்ள திமுக எம்பி டிஆர்வி ரமேஷ் குடும்பத்திற்கு சொந்தமான முந்திரி கம்பெனியில், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் வேலை செய்துவந்தார். அவர் முந்திரி திருடியதாக சந்தேகப்பட்டு, எம்பி,ரமேஷும் அவரது நிறுவன ஊழியர்களும் தாக்கியதில் இறந்துள்ளார். கோவிந்தராஜின் மகன் செந்தில்வேலின் புகாரின் பேரில் இந்த வழக்கை காடம்புலியூர் காவல் நிலையை போலீஸார், சந்தேக மரணமாக வழக்கைப் பதிவு செய்திருந்தனர்.

செந்தில்வேல் கொடுத்த புகாரில் எம்பி ரமேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்துதான் அடித்து கொலை செய்துவிட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் கோவிந்தராஜ் சந்தேக மரணம் வழக்கை செப்டம்பர் 26ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார் டிஜிபி சைலேந்திரபாபு.

இந்த விவகாரத்தை ஏற்கனவே நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்ற பாமக செய்தி தொடர்பாளரான வழக்கறிஞர் பாலு, இறந்துபோன கோவிந்தராஜின் மகன் செந்தில்வேலை அழைத்துக்கொண்டு நேற்று (செப்டம்பர் 27) டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்தார். அப்போது, இந்த வழக்கை சிபிசிஐடி டிஎஸ்பி அந்தஸ்தில் உள்ளவர் விசாரிக்கவேண்டும், இன்ஸ்பெக்டர் விசாரிக்கக்கூடாது, மேலும் கொலைப் புகாருக்கு உள்ளாகியிருக்கும் எம்பி ரமேஷுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்தார்.

அதே நேரத்தில் கடலூர் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் பி.தீபா நேற்று செப்டம்பர் 27ஆம் தேதி, முதல்கட்ட விசாரணையைத் துவக்கியுள்ளார்.

புதுப்பேட்டை இன்ஸ்பெக்டரும் காடம்புலியூர் காவல் நிலையத்தின் பொறுப்பு இன்ஸ்பெக்டருமான நந்தகுமார், சம்பவம் நடந்த மறுநாள் செப்டம்பர் 20ஆம் தேதி, காலையில், திமுக எம்பி ரமேஷுக்கு சொந்தமான கம்பெனிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளார். சம்பவத்தை நேரடியாகப் பார்த்த சில தொழிலாளிகளிடம் விசாரணை செய்தபோது கோவிந்தராஜை எப்படியெல்லாம் அடித்து கொடுமை செய்தார்கள் என்று சண்முகம், சுந்தர் உள்ளிட்ட தொழிலாளர்கள் போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள். அந்த வாக்குமூலங்கள் உள்ளடக்கிய கேஸ் டைரியும் சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த இரவில் கோவிந்தராஜை காடம்புலியூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்த சிசிடிவி கேமரா ஃபுட்டேஜ் மற்றும் கோவிந்தராஜை காவலர்கள் எடுத்த படம் ஆகியவற்றை சேகரித்துக் கொண்ட சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் தீபா, சிபிசிஐடி ஏடிஎஸ்பியுடன் ஆலோசித்து வருகிறார்.

மேலும் முந்திரி கம்பெனியில் எத்தனை சிசிடிவி கேமராக்கள் உள்ளன, அதன் , ஹார்ட் டிஸ்க் எங்கே அதன் ஆபரேட்டர் யார் என்றெல்லாம் விசாரணையில் தீவிரம் காட்டி வருகிறது சிபிசிஐடி

-வணங்காமுடி

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

செவ்வாய் 28 செப் 2021