மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 28 செப் 2021

ஊரடங்கு நீட்டிப்பு: தளர்வுகள் என்ன?

ஊரடங்கு நீட்டிப்பு: தளர்வுகள் என்ன?

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் தொடர்பாக முதல்வர் தலைமையில் பிற்பகல் 12.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 18 மாதங்களாகக் கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலிலிருந்து வருகிறது. தற்போது திருவிழாக்கள், அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கான தடையுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

வரும் செப்டம்பர் 31ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

சமீப நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு, சென்னை, கோவை, ஈரோடு, ஆகிய மாவட்டங்களில் ஒரு நாளுக்கு ஏறத்தாழ 150க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மூன்றாம் அலையைத் தடுக்கும் வகையில், பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் என்னென்ன கட்டுப்பாடுகள் கொண்டுவரலாம் என்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

அதோடு, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகளை திறப்பது குறித்தும், முதல்கட்டமாக 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்கலாமா என்பது குறித்தும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்திற்கான தடையை நீக்குவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படவுள்ளது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

செவ்வாய் 28 செப் 2021