மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 செப் 2021

நீட் - டாஸ்மாக்: 868 வழக்குகள் வாபஸ்!

நீட் - டாஸ்மாக்: 868 வழக்குகள் வாபஸ்!

நீட் மற்றும் டாஸ்மாக் ஆகியவற்றுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது பதியப்பட்ட 868 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.

கடந்த ஆட்சியில் போராட்டங்களின் போது பதியப்பட்ட வழக்குகளை திமுக அரசு ரத்து செய்து வருகிறது. கடந்த 24.6.2021 அன்று சட்டப்பேரவையில், ஆளுநர் உரையின் மீதான விவாதத்துக்கு அளித்த பதிலுரையில் 'கடந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள், ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள், மீத்தேன் - நியூட்ரினோ - கூடங்குளம் அணு உலை - சேலம் எட்டு வழிச்சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்' என்று முதல்வர் அறிவித்தார்.

அதன்படி, 5,570 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, கடந்த 13-9-2021 அன்று காவல்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது முந்தைய அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று தெரிவித்தார்.

அதன்படி, நீட் தேர்வுக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது பதியப்பட்ட 446 வழக்குகளும், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது பதியப்பட்ட 422 வழக்குகளும் என மொத்தம் 868 வழக்குகளைத் திரும்பப் பெறவும், அதன் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடவும் இன்று (செப்டம்பர் 27) உத்தரவு பிறப்பித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

-பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

திங்கள் 27 செப் 2021