மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 செப் 2021

பாலியல் புகார் ஐஜி முருகன் வழக்கை தமிழகத்தில் விசாரிக்கலாம்!

பாலியல் புகார் ஐஜி முருகன் வழக்கை தமிழகத்தில் விசாரிக்கலாம்!

ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கை தமிழகத்திலேயே விசாரிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 27) உத்தரவிட்டது.

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜியாக இருந்த முருகன் தனக்குக் கீழ் பணிசெய்த பெண் எஸ்பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் 2019 ஆம் ஆண்டு காவல் துறை மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த பாலியல் வழக்கை சிபிசிஐடி  விசாரிக்க விசாகா கமிட்டி பரிந்துரைத்தது. இதை எதிர்த்து ஐஜி முருகன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதே சமயத்தில் இவ்வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்று பெண் அதிகாரி தரப்பிலும் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஐஜி முருகனுக்கு எதிரான பாலியல் வழக்கை தெலங்கானா போலீசுக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஐஜி முருகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை பெற்றார்.

இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் மாநில காவல்துறையின் மீது நம்பிக்கை வைத்து வழக்கை தமிழகத்திலேயே விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தெலங்கானாவிற்கு மாற்ற தேவையில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது பெண் எஸ்.பி.யின் கோரிக்கையை ஏற்று ஐஜி முருகன் மீதான பாலியல் வழக்கை தமிழ்நாட்டிலேயே விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. பாலியல் புகார் ஐஜி முருகன் மீதான வழக்கை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

திங்கள் 27 செப் 2021