மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 செப் 2021

மருத்துவமனையில் சிறுமியை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்!

மருத்துவமனையில் சிறுமியை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக உதவி கேட்டு வீடியோ வெளியிட்ட, சேலம் சிறுமியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

சேலம் மாவட்டம், அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி, விஜயகுமார்- ராஜநந்தினி. இவர்களுக்கு 14 வயதில் ஜனனி என்ற மகள் உள்ளார். சிலம்பாட்டம், ஸ்கேட்டிங், வில் வித்தை போன்ற போட்டிகளில் மாநில அளவில் பரிசுகளைப் பெற்றுள்ளார் ஜனனி. கடந்த 2019ஆம் ஆண்டு ஜனனி வீட்டில் இருக்கும்போது திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்ததில் சிறுமிக்கு இரண்டு கிட்னிகள் செயலிழந்து போனது தெரியவந்தது. இதையடுத்து தாயார் ராஜநந்தினி தன்னுடைய ஒரு கிட்னியை ஜனனிக்கு கொடுத்தார். ஆனால், அதுவும் 15 நாட்களிலேயே செயலிழந்துவிட்டதால் என்ன செய்வதென்று விழி பிதுங்கி நின்று கொண்டிருந்த ராஜநந்தினி, இதுகுறித்து 2019ஆம் ஆண்டு முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அளித்துள்ளார்.

ஆனால் முறையான எந்த பதிலும் கிடைக்காததால், தனியார் மருத்துவமனைகளில் அவ்வப்போது சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இதனிடையே, நோய்வாய்ப்பட்ட மகளையும் மனைவியையும் விட்டுவிட்டு விஜயகுமார் பிரிந்து சென்றுவிட்டார்.

நிர்க்கதியான சூழ்நிலையில் தங்களுக்கு உதவுமாறு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜனனியும், அவரது தாயாரும் சேர்ந்து வீடியோ ஒன்றை அனுப்பினர். அந்த வீடியோவில் பேசும் சிறுமி ஜனனி, ”சிஎம் சார்! எனக்கு சிறுநீரகம் பாதித்துள்ளது, நான் சீக்கிரமாக செத்துவிடுவேன் என எல்லாரும் சொல்கிறார்கள். எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா என்று சிறுமி கண்ணீருடன் உதவி கேட்டிருந்தார்.

இந்த வீடியோ முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று சிறுமியின் தாயாரை செல்போனில் அழைத்து பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சரிடமும் கலெக்டரிடமும் பேசியுள்ளேன். விரைவில் சிகிச்சை அளிக்கப்படும். பயப்பட வேண்டாம். தைரியமாக இருங்கள் என்று ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிறுநீரக சுத்திகரிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுமி ஜனனியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். சிறுமி மற்றும் ,அவரின் தாயிடம் பேசிய முதல்வர், எதற்கும் பயப்படாமல் இருங்கள்…நாங்கள் இருக்கிறோம்…சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும்” என்று வார்த்தைகளால் தேற்றினார். அப்போது, அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

முதல்வரே நேரில் வந்ததால் சிறுமியும் தாயும் நெகிழ்ந்துபோய் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

-வினிதா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

திங்கள் 27 செப் 2021