மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 செப் 2021

ஜனவரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

ஜனவரியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கும் நிலையில்.... ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கான தேர்தல் வரும் ஜனவரி மாதம் நடைபெற இருக்கிறது. இதை இன்று (செப்டம்பர் 27) உச்ச நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவாக பிறப்பித்திருக்கிறது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செப்டம்பர் 4 ஆம் தேதி, “தமிழ் நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவதற்கு ஏழு மாத கால அவகாசம் வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு கடந்த 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தைக் கடுமையாக கண்டித்தார். “சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களையெல்லாம் உரிய நேரத்தில் நடத்த முடிகிறது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாதா?” என்று தலைமை நீதிபதி கடுமையாக கேள்விகளை தொடுத்திருந்தார். அன்று, தலைமை நீதிபதியின் கோபத்தை அடுத்து, “எங்களுக்கு 7 மாத கால அவகாசம் வேண்டாம். நான்கு மாத கால அவகாசம் போதும்” என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதுபற்றி புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார் தலைமை நீதிபதி.

அந்த வகையில் மீண்டும் வழக்கு இன்று (செப்டம்பர் 27) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், “தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை நடத்திட அவகாசம் அளிக்கலாம். அதில் அரசுக்கு ஆட்சேபணை இல்லை” என்று தெரிவித்தார். “நீங்களே விரைவில் நடத்த வேண்டும் என்று முன்பு கூறினீர்கள். இப்பொழுது நீங்களே அவகாசம் அளிக்கலாம் என்று சொல்கிறீர்கள்” என கடிந்து கொண்ட தலைமை நீதிபதி, “தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு வரும் ஏப்ரல் 2022 வரை அவகாசம் கேட்டிருந்தது. மழைக்காலம், கொரோனா தொற்றில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், புதிதாக அறிவிக்கப்பட்ட நகராட்சிகள்,மாநகராட்சிகளுக்கு வார்டு சீரமைப்பு, இட ஒதுக்கீடு செய்ய வேண்டியமை உள்ளிட்ட காரணங்களை காட்டி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டது. ஆனால் இவையெல்லாம் உரிய காரணங்கள் இல்லை. எனவே நான்கு மாத கால அவகாசம் மட்டுமே தருகிறோம். அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வரும் ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து பேரூராட்சி நகராட்சி மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியது கட்டாயமாகி இருக்கிறது.

-வேந்தன்

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

திங்கள் 27 செப் 2021