மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 27 செப் 2021

ஒகேனக்கல்: பார்க்க மட்டுமே அனுமதி!

ஒகேனக்கல்: பார்க்க மட்டுமே அனுமதி!

இன்று முதல் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை சுற்றிப்பார்க்க மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சுற்றுலா பகுதிகளில் மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பரவல் குறைந்து வருவதையடுத்து சில இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஒகேனக்கல் சுற்றுலா பகுதியில் மக்கள் வருகைக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நீர் வரத்து அதிகரிப்பின் காரணமாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் தளர்வு, நீர் வரத்து குறைவு காரணமாக உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஒகேனக்கல் சுற்றுலா பகுதியில் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஒகேனக்கல்லுக்கு வரும் மக்கள் மடம் செக்போஸ்ட், ஒகேனக்கல் பேருந்து நிலையம், ஆலம்பாடி செக்போஸ்ட் உள்ளிட்ட மூன்று பகுதிகளில் சோதனை செய்யப்படுவார்கள். இங்கு வருகிற அனைத்து மக்களும் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழைக் காண்பிக்கப்பட வேண்டும். ஒகேனக்கல் பரிசல் ஓட்டிகள், எண்ணெய் மசாஜ் தொழிலாளர்கள், சமையல் செய்பவர்கள், வணிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதி செய்த பின்னரே அனுமதிக்கப்படுவர்.

மக்கள் அருவி, ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்க அனுமதி இல்லை. பரிசலில் சென்று சுற்றிப் பார்க்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் இன்று (செப்டம்பர் 27) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

திங்கள் 27 செப் 2021