மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 செப் 2021

நகைக்கடன் முறைகேடு: ஆய்வு செய்ய குழு அமைப்பு!

நகைக்கடன் முறைகேடு: ஆய்வு செய்ய குழு அமைப்பு!

கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட அனைத்து நகைக் கடன்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

திமுக தனது தேர்தல் அறிக்கையில், கூட்டுறவு வங்கிகளில் வைத்த 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. இதையடுத்து, இத்திட்டத்தின் கீழ் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதற்காக ஒரே ஆதார் எண்ணை பயன்படுத்தி ஒரே நபர் பல கூட்டுறவு வங்கிகளில் நகைகளை அடகு வைத்துள்ளதும், ஒருசில இடங்களில் நகைகள் அடகு வைக்காமலேயே நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளதும் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. அதனால், நகைக்கடன் தள்ளுபடியில் நடந்துள்ள முறைகேடு குறித்து ஆய்வு நடத்தப்பட்ட பின்பு, தகுதியானவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் நடைபெற்ற நகைக்கடன் முறைகேட்டை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனைத்து மண்டல மேலாண் இயக்குனர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 5 சவரன் வரையிலான நகைக்கடன் மட்டுமின்றி கூட்டுறவு வங்கிகளால் வழங்கப்பட்டுள்ள அனைத்து பொது நகைக் கடன்களையும் 100 சதவிகிதம் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

கூட்டுறவு பதிவாளர், கூட்டுறவு வங்கியின் தரகு மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர்கள் கொண்ட குழுவும், சென்னை மண்டலத்தில் துணைப்பதிவாளர்களைக் கொண்ட குழுவும் தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 100 சதவிகித பொது நகைக்கடன்களை ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்கும்.

நகைக்கடன் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து நவம்பர் 21 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

ஞாயிறு 26 செப் 2021