மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 செப் 2021

திமுக எம்பி மீது கொலைப்புகார்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு!

திமுக எம்பி மீது கொலைப்புகார்:  சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு!

திமுகவின் கடலூர் மக்களவை எம்பியான டி.ஆர்.வி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராஜ் மர்ம மரணம் அடைந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி இன்று (செப்டம்பர் 26) தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

திமுக எம்பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் பணிக்கன் குப்பம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கே வேலை செய்த கோவிந்தராஜ் என்ற தொழிலாளி கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி இரவு மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரை எம்.பி.யும், அவரது ஆட்களும் தாக்கிக் கொலை செய்துவிட்டார்கள் என்று கோவிந்தராஜின் மகன் செந்தில்வேல் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

சந்தேக மரணம் என்ற வகையில் வழக்குப்பதிவு செய்து இதனை காடாம்புலியூர் காவல் நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே பாமக பிரமுகரான வழக்கறிஞர் கே பாலு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பெயரில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் கோவிந்தராஜ் உடலை கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து முடித்தனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தொழிலாளி கோவிந்தராஜன் கொலையில் நீதி கிடைக்கும் வரை ஓயப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

தற்போது நடந்துள்ள விசாரணையில் கிடைத்த தகவல்களின் படி இந்த வழக்கு கடலூர் எம்பி ரமேஷிற்கு எதிரான கொலை வழக்காக மாற்றப்பட சட்ட சாத்தியங்கள் அதிகமாக இருப்பதாக காவல்துறை வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர் என்றும், இதையடுத்து ரமேஷ் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி, கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு! என்ற தலைப்பில் இன்று மின்னம்பலத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், கடலூர் காவல்துறை அளித்த ரிப்போர்ட் டிஜிபிக்கு சென்று முதல்வருடன் இதுபற்றி ஆலோசிக்கப்பட்ட நிலையில் கோவிந்தராஜ் சந்தேக மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்ய தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

-வணங்காமுடி

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

ஞாயிறு 26 செப் 2021