மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 26 செப் 2021

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் புதிய தலைவர்!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் புதிய தலைவர்!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக சுப்ரியா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக வெங்கடாசலம் நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதில் முறைகேடுகள் நடத்தியதாகக் எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

சென்னை கிண்டி, மாசு கட்டுப்பாடு வாரியத்தில் உள்ள வெங்கடாச்சலத்தின் அலுவலகம், சென்னை வேளச்சேரி, புதிய தலைமைச் செயலக காலனி, இரண்டாவது பிரதான சாலையில் உள்ள அவரது வீடு மற்றும் சேலம் அம்மம்பாளையத்தில் உள்ள அவரது வீடு மற்றும் உறவினர் வீடுகளில் நடத்திய சோதனையில் 13.5 லட்சம் ரொக்கம், 6.5 கிலோ தங்கம், 10 கிலோ சந்தன மரத்தாலான பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

செப்டம்பர் 27ஆம் தேதி ஓய்வு பெற இருந்த நிலையில், இந்த அதிரடி சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில், யார் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமனம் செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

இதனை தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக சுப்ரியா சாஹூவுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி, தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்போது தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை செயலாளராக இருந்து வரும் சுப்ரியா சாஹூக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சுப்ரியா சாஹூ ஐஏஎஸ்

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த சுப்ரியா சாஹூ 1991 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இவர் கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஆட்சியர், தூர்தசன் தலைமை இயக்குனர், இன்ட்கோசர்வ் தலைமை செயல் இயக்குநர் என ஒன்றிய, மாநில அரசு பணிகளில் பணியாற்றி வந்தார். 2002 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்ட ஆட்சியராக பணியாற்றிபோது ஒரே நேரத்தில் 43 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு கின்னஸ் சாதனை படைத்தார்.

தற்போது இவர் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வரும் நிலையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதன் முதலில் பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்தை 2000 ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் நீலகிரி மாவட்ட மலைப் பகுதிகளில் இவர்தான் அறிமுகப்படுத்தினார். இது பின்னாட்களில் மக்கள் இயக்கமாக உருவெடுத்தது.

இயற்கை மற்றும் வனவிலங்குகள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இவருடைய ஆக்கப்பூர்வமான பணிகளால் மக்கள் மத்தியில் பிரபலமானார். தான் சமூக நலனில் அக்கறை கொண்டிருப்பது போன்று, சமூக நல அக்கறை உள்ளவர்களின் செயல்பாடுகளை பாராட்ட இவர் தவறியதில்லை. சமீபத்தில் கூட பெண் ஒருவர் பாம்பை அடிக்காமல் லாவகமாக திருப்பி அனுப்பும் வீடியோ ஒன்றை தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டு பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

ஞாயிறு 26 செப் 2021