மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 25 செப் 2021

நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா?: உச்ச நீதிமன்றம்!

நில அபகரிப்பு  சிறப்பு நீதிமன்றங்கள் செயல்படுகிறதா?: உச்ச நீதிமன்றம்!

தமிழகத்தில் நில அபகரிப்பு வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிமன்றங்கள் செயல்படுகிறதா? இல்லையா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நில அபகரிப்பு தொடர்பான புகார்களை விசாரிப்பதற்காக 2011ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்கத் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், நில அபகரிப்புக்காகச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பதற்கான தமிழக அரசின் அரசாணையைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து 2011 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நில அபகரிப்பு புகார் தொடர்பாகச் சிறப்புப் பிரிவு மற்றும் நீதிமன்றங்கள் விசாரணை நடத்தத் தடை இல்லை என உத்தரவிட்டு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 36 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.

இந்த சூழலில் நில மோசடி தொடர்பாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில் தனக்கு இழைக்கப்பட்ட நில மோசடி சம்பந்தமான வழக்குகளை விசாரிக்க இதுவரை சிறப்பு நீதிமன்றம் செயல்படவில்லை என்று தெரிவித்திருந்தார். மேலும் இந்த வழக்குகளை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி மற்றும் ஹெச்.ராய் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றங்களும் செயல்படுகிறதா? இல்லையா?. எத்தனை வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது?. 2012 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு தற்போது வரையில் நிலுவையில் இருப்பது ஏன்? என்று கேள்விகளை எழுப்பினர்.

மேலும் இவ்விவகாரம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் விரிவான அறிக்கையை 6 வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

சனி 25 செப் 2021