மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 25 செப் 2021

அதிமுகவின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு: எடப்பாடி பழனிசாமி

அதிமுகவின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு: எடப்பாடி பழனிசாமி

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் வேட்பு மனுக்களைத் திட்டமிட்டு நிராகரிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி,தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி இன்று (செப்டம்பர் 25) காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன், ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், பொய் வாக்குறுதிகள் மூலம் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியைக் கைப்பற்றிது. வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கேட்டால் 5 ஆண்டுக் காலம் இருக்கிறது என்கின்றனர்” என்று விமர்சித்தார்.

மேலும் அவர், ”அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. அதற்காகத் தொடர்ந்து தமிழகத்துக்கு விருதுகள் கிடைத்தது. ஆனால் கடந்த 4 மாத காலங்களில் கொலை கொள்ளை என தினமும் அரங்கேறும் நிகழ்வுகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நீட் தேர்வு ரத்து என்று ஊர் ஊராகச் சென்று அறிவித்தனர். ஆனால் இவ்விவகாரத்திலும் திமுக, மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றிவிட்டது.

கடந்த திமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலின் போது அதிகளவு முறைகேடுகள் நடந்தன. எனவே இந்த தேர்தலில் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். தற்போது அதிமுகவினரின் மனுக்கள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டுக் கொடுத்தாலும் திட்டமிட்டு நிராகரிக்கிறார்கள். ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி அதிமுகவினர் வேட்புமனுக்களை நிராகரிக்கும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அதிமுக சார்பில் அக்கட்சியின் சட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும், செய்தித் தொடர்பாளருமான வழக்கறிஞர் எம். பாபு முருகவேல் இன்று மாலை தேர்தல் ஆணையருக்கு புகார் மனுவை அளித்துள்ளார்.

அந்த மனுவில், “ நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய ஊரக உள்ளாட்சி தேர்தலில் நேர்மறையாக இந்த தேர்தலை சந்திக்க திராணி இல்லாத திராவிட முன்னேற்றக் கழகம், அரசு எந்திரத்தை பயன்படுத்தி 9 மாவட்டங்களில் பல இடங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை சட்டத்திற்கு புறம்பாக தள்ளுபடி செய்திருக்கிறது.

குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நான்கு ஒன்றியக்குழு உறுப்பினர்களுடைய மனுக்களையும், தியாகதுருகம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருடைய மனுவையும், ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருடைய வேட்பு மனுவையும் தள்ளுபடி செய்து இருக்கிறார்கள். அதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சொல்லி இருக்கக் கூடிய காரணம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு முன்மொழிந்து இருக்கக்கூடிய வாக்காளர் வேறு ஒரு வேட்பாளருக்கு முன்மொழிந்து இருக்கிறார் என்று வேட்பு மனுவை தள்ளுபடி செய்து இருக்கிறார்கள்.

ஆனால், சம்பந்தப்பட்ட நபரை நேரில் அழைத்துச் சென்று நான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு மட்டும்தான், முன்மொழிந்து இருக்கிறேன் வேறு யாருக்கும் முன்மொழியவில்லை என்று சொன்னாலும், அந்த முன்மொழிந்த வாக்காளரின் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தாலும் அதையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இல்லை.

தேர்தல் விதிகளுக்கு மாறாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செயல்பட்டிருக்கிறார்கள். இவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறுகின்ற பட்சத்தில் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டுவதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருக்கிறது”என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

அந்த புகார் மனுவை முழுவதுமாக படித்து பார்த்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கருத்துரு பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்.

-வேந்தன், பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

சனி 25 செப் 2021