மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 25 செப் 2021

போலீசாரின் ஸ்டாமிங் ஆபரேஷன்: 2,512 ரவுடிகள் கைது!

போலீசாரின்  ஸ்டாமிங் ஆபரேஷன்: 2,512 ரவுடிகள் கைது!

'ஸ்டாமிங் ஆபரேஷன்' மூலம் தமிழகம் முழுவதும் இதுவரை 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை என குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக காவல்துறை கடந்த இரண்டு நாட்களாக ரவுடிகளை கைது செய்ய களத்தில் இறங்கியது. டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் 48 மணி நேரம் இரவு பகலாக ஸ்டாமிங் ஆப்ரேஷன் நடைபெற்றது.

இந்த சோதனை குறித்து காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் செப்டம்பர் 23 அன்று இரவு முதல் ஸ்டாமிங் ஆப்ரேஷன் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் கடந்த 36 மணி நேரத்தில் 16,370 பழைய குற்றவாளிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

சோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மொத்தம் 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 244 ரவுடிகள் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளின் பிடியாணையின்படி கைதானார்கள். பல்வேறு குற்ற வழக்குகளுக்காக 733 ரவுடிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், 1,927 ரவுடிகளிடமிருந்து நன்னடத்தைக்காக பிணை ஆணை பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து 5 நாட்டுத் துப்பாக்கிகள், 929 கத்திகள் உள்ளிட்ட பிற ஆயுதங்கள் என, மொத்தம் 934 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொலைக் குற்றங்களில் ஈடுபடுகின்ற ரவுடிகளுக்கு எதிரான காவல்துறையின் இந்தக் கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

சனி 25 செப் 2021