மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 25 செப் 2021

பணம் கொடுத்து படிவம் வாங்க தேவையில்லை: தமிழக அரசு!

பணம் கொடுத்து படிவம் வாங்க தேவையில்லை: தமிழக அரசு!

முதல்வரின் தனிப் பிரிவுக்கு மனுக்களைக் கொடுக்க பணம் கொடுத்து படிவம் எதுவும் வாங்கத் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள், தொடர்புடைய மாவட்டங்கள்/துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலவச வீடு ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பு கோரி தினமும் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொது மக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களைக் கொடுத்து வருகின்றனர்.

இவ்வாறு முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளிக்கப்படும் பெரும்பாலான மனுக்கள் ஒரு குறிப்பிட்ட படிவத்தில் தான் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அளிக்கப்பட வேண்டும் என்ற தவறான செய்தி அண்மையில் பரவியது.

இதுதொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “ முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனுக்களை அளிக்க வரும் பெரும்பாலான பொதுமக்கள் குறிப்பிட்ட படிவங்களைப் பணம் கொடுத்து வாங்கி மனுக்களை அளித்து வருவதாகவும் செய்திகள் அரசின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை அளிக்க எவ்வித குறிப்பிட்ட படிவமும் அரசால் பரிந்துரைக்கப்படவில்லை. மேலும், மனுக்களை அளிக்க வரும் பொதுமக்கள், ஒரு வெள்ளைத்தாளில் தங்கள் கோரிக்கைகளை எழுதி தேடப்படின் உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அளித்தாலே போதுமானது.

முதலமைச்சரின் தனிப்பிரிவில் பல்வேறு வழிகளில் பெறப்படும் (தபால்/இணையதளம் (www.cmcell.tn.gov.in) /முதலமைச்சர் உதவி மையம் (cmhelpline.tnega.org) மற்றும் மின்னஞ்சல் ([email protected]) அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க ஒரே மாதிரியான நடைமுறையே பின்பற்றப்படும்.

ஆகையினால், தங்கள் கோரிக்கைகள் தொடர்பாகக் குறிப்பிட்ட படிவத்தில்தான் மனுக்களை அளிக்க வேண்டும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பணம் கொடுத்து மனுக்களை வாங்கி அளிக்க வேண்டாம் எனவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், கொரோனா பெருந்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில், தினமும் நேரடியாக மனுக்களை அளிப்பதற்காகப் பொதுமக்கள் கூடுவதைத் தவிர்த்து, இணையவழி சேவைகளைப் பயன்படுத்தி மனுக்களை அளித்துப் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

சனி 25 செப் 2021