மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 செப் 2021

ராஜ்யசபா: கனிமொழிக்கு ஐந்து வருடம்; ராஜேஷுக்கு ஒரு வருடம்!

ராஜ்யசபா:  கனிமொழிக்கு ஐந்து வருடம்; ராஜேஷுக்கு ஒரு வருடம்!

தமிழ்நாட்டில் இருந்து அடுத்து ராஜ்யசபா எம்பிகள் ஆக இருக்கும் கனிமொழி சோமு, கே.ஆர்.என். ராஜேஷ்குமார் ஆகியோரின் பதவிக் காலங்கள் எத்தனை வருடங்கள் என்பதை இன்று (செப்டம்பர் 23) தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

அதிமுக உறுப்பினர்களான கே.பி. முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோரின் ராஜினாமாவால் ராஜ்ய சபாவுக்கு கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்த நிலையில்... அந்த இரண்டு இடங்களுக்கு கனிமொழி என்.வி.என். சோமு. கே.ஆர்.என். ராஜேஷ்குமார் ஆகியோரை செப்டம்பர் 14 ஆம் தேதி திமுக அறிவித்தது.

அன்றே மின்னம்பலத்தில் ராஜ்யசபா: காங்கிரஸுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி என்ற தலைப்பில் நாம் வெளியிட்ட செய்தியில், எந்த இடம் யாருக்கு என்பதைக் குறிப்பிட்டிருந்தோம்.

அந்த செய்தியில், “அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பிகளாக இருந்த கே.பி.முனுசாமி, ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தங்களது ராஜ்யசபா எம்பி பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து ராஜ்யசபாவில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் கே.பி. முனுசாமி, ஆர். வைத்திலிங்கம் ஆகிய வரிசையில் பெயர்கள் பட்டியல் இடப்பட்டிருந்தன. கே.பி. முனுசாமியின் பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டு வரை இருக்கிறது. வைத்திலிங்கத்தின் பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு வரைதான் இருக்கிறது..

இந்த வகையில் திமுக வேட்பாளர்களாக மறைந்த திமுகவின் முன்னோடி தலைவர் வி.வி.என். சோமுவின் பேத்தி கனிமொழிக்கும் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் குமாருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திமுகவின் வேட்பாளர் அறிவிப்பின்படி பார்த்தால் கே.பி. முனுசாமியின் இடத்தில் கனிமொழிக்கு 2026 ஆம் ஆண்டு வரையும், வைத்திலிங்கத்தின் இடத்தில் ராஜேஷ் குமாருக்கு 2022ஆம் ஆண்டு வரையும் ராஜ்யசபா பதவி வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது” என்று அந்த செய்தியில் எழுதியிருந்தோம்.

இன்று (செப்டம்பர் 23) தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்ட செய்தி மின்னம்பலத்தின் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று பேரவைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ கே.பி. முனுசாமி, ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்களை வாக்காளர்களாகக் கொண்டு மாநிலங்களவைக்கு (ராஜ்யசபாவுக்கு) இரு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க செப்டம்பர், அக்டோபர் 21 இல் தனித்தனியாக நடைபெறும் இடைத்தேர்தலுக்கு வரப்பெற்ற வேட்பு மனுக்கள் செப்டம்பர் 23 ஆம் தேதி கூர்ந்தாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

கே.பி. முனுசாமியின் வெற்றிடத்தை நிரப்பப் பெறப்பட்ட வேட்பு மனுக்களின் ஆய்வுக்குப் பிறகு திமுகவைச் சேர்ந்த கனிமொழி என்.வி.என்.சோமுவின் வேட்பு மனு செல்லத் தக்கது என அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் மூன்று சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

ஆர். வைத்திலிங்கத்தின் வெற்றிடத்தை நிரப்பப் பெறப்பட்ட வேட்பு மனுக்களின் ஆய்வுக்குப் பிறகு திமுகவைச் சேர்ந்த கே.ஆர்.என். ராஜேஷ்குமாரின் வேட்பு மனு செல்லத் தக்கது என அறிவிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார் தமிழ்நாடு சட்டமன்றச் செயலாளரும், ராஜய்சபா தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசன்.

இதில் இருந்து கே.பி. முனுசாமிக்கு பதிலாக 2026 வரை கனிமொழி என்.வி.என். சோமுவும், வைத்திலிங்கத்துக்கு பதிலாக 2022 வரை கே.ஆர்.என். ராஜேஷ்குமாரும் ராஜ்யசபா எம்பியாக இருப்பார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

-ஆரா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 23 செப் 2021