மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 23 செப் 2021

மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் ரெய்டு!

மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் ரெய்டு!

முன்னாள் அமைச்சர்களைத் தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக கந்தசாமி பதவியேற்றதிலிருந்து முந்தைய ஆட்சியில் முறைகேடு மற்றும் ஊழல் புகாரில் சிக்கியவர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஜூலையில் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், ஆகஸ்ட்டில் முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, செப்டம்பரில் முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது. அடுத்தது யார் வீட்டில் சோதனை நடத்தப்படும் என்று எதிர்பார்ப்பும் கேள்வியும் எழுந்தது.

இந்த சூழலில் முக்கிய அதிகாரியான தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலத்தின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று மதியம் 12 மணி முதல் சென்னை கிண்டியில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் வேளச்சேரியில் உள்ள வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான வெங்கடாசலம் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அம்மம்பாளையத்தைச் சேர்ந்தவர். 2019ஆம் ஆண்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். தனது பதவியைப் பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களுக்கு விதியை மீறி என்ஓசி எனப்படும் நோ அப்ஜெக்ஷன் சர்டிஃபிகேட் வழங்கியதாகவும், அதன்மூலம் அதிகளவு லஞ்சம் கைமாறி சொத்து சேர்த்ததாகவும், குறிப்பாக தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன் அவசர அவசரமாக 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு இவர் ஒப்புதல் வழங்கியதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இரவு வரை இந்த சோதனை தொடரவுள்ளது.

பிரியா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

வியாழன் 23 செப் 2021