மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 செப் 2021

திமுகவால் விவசாயிகளுக்கு பலனில்லை: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

திமுகவால் விவசாயிகளுக்கு பலனில்லை: எம்.ஆர்.விஜயபாஸ்கர்

நகைக் கடன், பயிர்க் கடன் தள்ளுபடியில் விவசாயிகளுக்கு பலன் இல்லை என்று முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிமுக அரசில் 12,110 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. சிட்டாடங்கள் வைத்து நகைக் கடன் பெற்றிருந்தால் அதுவும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்சி மாறிய நிலையில், விரையில் ரூ.10 ஆயிரம் கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்தார் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி. ஆனால் தற்போது வரை பயிர்க்கடன் ரத்து செய்யப்படவில்லை. பயிர்க்கடன், நகைக் கடன் பெற்றதில் கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அனைத்து வங்கிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வுக்குப் பின் தள்ளுபடிக்கான ரசீது வழங்கப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக இன்று கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “கடந்த 4 மாத திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறி நிச்சயம் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறுவோம். கடந்த ஆட்சியில் ரூ.12,110 கோடி விவசாயக் கடன் மற்றும் நகை, மகளிர் சுயஉதவிக் குழு கடன்கள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திமுக அரசு 51 சட்டதிட்டங்களைச் சொல்லி அதைத் தள்ளுபடி செய்வதைக் குறைத்து, விவசாயிகளுக்கு அந்த பலன் கிடைக்காத வகையில் செய்துவிட்டது” என்று குற்றம்சாட்டினார்.

மேலும் அவர், திருமண மண்டபங்களில் நடைபெறும் திருமணங்களுக்குத் தாலிக்குத் தங்கம், திருமண உதவித் தொகை கிடையாது என சில விதிமுறைகளைக் கூறியுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஏழை, எளிய மக்களுக்காகக் கொண்டு வரப்பட்ட திட்டங்களைக் குறைக்கவேண்டும். படிப்படியாக நிறுத்தவேண்டும் என்ற திமுகவின் எண்ணங்களை மக்களிடம் எடுத்துச் செல்வோம்” என்றார்.

மின் தடை குறித்து பேசிய அவர், மின்சாரம் எப்போது வருகிறது, எப்போது போகிறது என்றே தெரியவில்லை. இதுபற்றி கேட்டால் அணில் கதை எல்லாம் அமைச்சர் சொல்கிறார் என்று விமர்சித்தார்.

-பிரியா

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த ‘விஷய’ பாஸ்கர்!

8 நிமிட வாசிப்பு

10 ஆயிரம் கோடி: விஜிலென்ஸை வியக்க வைத்த  ‘விஷய’ பாஸ்கர்!

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

2 நிமிட வாசிப்பு

சூரியனைப் பார்த்து...: சசிகலா பற்றி எடப்பாடி கடுமை!

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

8 நிமிட வாசிப்பு

துரைமுருகன் பெயரைச் சொல்லி... ஆலங்காயம் திமுக அட்டகாசம்!

புதன் 22 செப் 2021