மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 செப் 2021

முந்திரி ஆலை தொழிலாளி மரணம்: போலீஸுக்கு உத்தரவு!

முந்திரி ஆலை தொழிலாளி மரணம்: போலீஸுக்கு உத்தரவு!

கடலூரில் முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் உயிரிழந்த தொழிலாளி கோவிந்தராஜின் உடலைப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் பணிக்கன்குப்பம் பகுதியில் உள்ள திமுக எம்.பி. டிஆர்வி.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றி வந்த கோவிந்தராஜு என்ற தொழிலாளி கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று டிஆர்வி .ரமேஷ் தரப்பில் கூறப்படும் நிலையில், கோவிந்தராஜுவின் மகன் செந்தில்வேல், ‘அப்பாவைக் கொலை செய்துவிட்டனர்’ என்று காடாம்புலியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் அவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில் தன் தந்தை கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ்தான் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ள அவர், தந்தையின் மரணத்தை உரிய முறையில் காவல்துறை விசாரிக்கவில்லை. இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

தனது தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது உடலைப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று (செப்டம்பர் 22) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் விழுப்புரம் , முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டிருக்கும் உடலை அங்கு உள்ள மூன்று மருத்துவர்கள் மூலம் பிரேதப் பரிசோதனை செய்யவும் அதை வீடியோ பதிவு செய்யவும் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுதாரர் விரும்பினால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலிருந்து ஒரு மருத்துவரைப் பிரேதப் பரிசோதனை செய்யும்போது அனுமதிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

ஆனால் மனுதாரர் தரப்பில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அதன் மருத்துவர்களைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி நிர்மல் குமார், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்ள கோவிந்தராஜின் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் குழு நாளை பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

மேலும் கோவிந்தராஜின் மரணம் தொடர்பாக காடாம்புலியூர் காவல் துறையினர் ஆரம்பக் கட்ட விசாரணை நடத்தி வரும் நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்து முன்கூட்டியே முடிவு எடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். எனினும் காவல் ஆய்வாளரின் விசாரணையை பண்ருட்டி டிஎஸ்பி கண்காணிக்கவும் உத்தரவிட்டார்.

காவல் துறையினர் மரண வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

புதன் 22 செப் 2021