மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 22 செப் 2021

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

திமுகவினர் மீது வழக்குகள் பதியப்பட்டதா?: டிஜிபியிடம் ஆளுநர் கேள்வி!

தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்ற ஆர்.என்.ரவி , காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்துப் பேசி வருவது ஆட்சியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பு ஏற்கும் முன்பே, திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் விசிக கட்சித் தலைவர் திருமாவளவன் இருவரும் ஆளுநருக்கு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி, சென்னை வந்த ஆர்.என்.ரவி, செப்டம்பர் 18ஆம் தேதி தமிழ்நாடு ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

வழக்கமாக புதிய ஆளுநரை, டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர் மரியாதை நிமித்தமாகச் சந்திப்பது வழக்கமான நிகழ்வுதான்.

ஆனால் ஆளுநரே டிஜிபியை அழைத்துப் பேசியதுதான் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று (செப்டம்பர் 21) காலை 11.00 மணிக்கு, ஆளுநர் ரவி, தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபுவை நேரில் அழைத்து அரை மணிநேரம் பேசினார். அதில் சட்டம் ஒழுங்கு பற்றியும், தமிழகத்தில் மத்திய அரசுக்கு எதிராக திமுகவினர் நடத்திய போராட்டங்கள் மற்றும் அவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டதா என்பது பற்றியும் கேட்டுள்ளார்.

இன்று செப்டம்பர் 22ஆம் தேதி காலை சுமார் 11.20 மணியளவில் உளவுத் துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தையும் அழைத்து பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

நேற்று டிஜிபி, இன்று உளவுத்துறை ஏடிஜிபி ஆகியோரை அழைத்துப் பேசிய ஆளுநர், நாளையும், நாளை மறுநாளும் உள்துறை செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளரை அழைத்துப் பேச இருப்பதாகச் சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

முன்னதாக தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் வெளி மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி வந்தபோது, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக கருப்பு கொடி காட்டி கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது.

ஆனால், இன்று திமுக ஆட்சியில் புதிய ஆளுநராக வந்திருப்பவர், ஆளுநர் மாளிகைக்கு அதிகாரிகளை அழைத்து ஆலோசனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வணங்காமுடி

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

புதன் 22 செப் 2021