மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 செப் 2021

பண மோசடி வழக்கு: செந்தில் பாலாஜிக்கு உத்தரவு!

பண மோசடி வழக்கு: செந்தில் பாலாஜிக்கு உத்தரவு!

வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் வாக்குமூலங்களை பெறுவதற்காக நேரில் ஆஜராகும்படி, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட இருவருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் 2011-2015 ஆண்டுகளில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த, செந்தில் பாலாஜி வேலை வாங்கித் தருவதாக கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக, சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.

அளிக்கப்பட்ட புகாரின் பேரில், செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு, சகாயராஜ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கில், 47 பேர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நகல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், புகார்தாரர்களின் வாக்குமூலங்களை குற்றம்சாட்டப்பட்ட 47 பேருக்கும் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி என். ஆலிசியா முன் நேற்று (செப்டம்பர் 20) விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதையடுத்து, வாக்குமூலத்தின் நகலைப் பெறுவதற்காக, அக்டோபர் ஐந்தாம் தேதி நேரில் ஆஜராகும்படி அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட இருவருக்கும் உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.

-வினிதா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

செவ்வாய் 21 செப் 2021