மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 செப் 2021

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவார்: மா.சு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவார்: மா.சு

நீட் விலக்கு மசோதாவுக்கு புதிய ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்று நம்புவதாகவும், இம்மசோதா ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதன்முறையாக முதுகலை மருத்துவ படிப்புக்கான சிமுலேஷன் மையத்தை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வை அனுமதித்தால் தமிழகத்தின் கல்வி வளர்ச்சி 75 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிடும் என்று நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தெரிவித்துள்ளது.

எனவே சட்டப் பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநரும் இந்த மசோதாவிற்கு விரைவாக ஒப்புதல் வழங்குவார் என்று நம்புகிறோம். இந்த ஒப்புதலுக்குப் பிறகு ஆளுநர் மூலம் நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவருக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

நீட் தேர்வால் தமிழகத்துக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குடியரசுத் தலைவர் உணரும் பட்சத்தில் அவரும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பார் என்று நம்பப்படுகிறது” என்று தெரிவித்தார்.

வேலூரில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், “தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானம் சட்ட ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

-பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

செவ்வாய் 21 செப் 2021