மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 செப் 2021

உள்ளாட்சித் தேர்தல்: 24 மணி நேரமும் கண்காணிப்பு!

உள்ளாட்சித் தேர்தல்: 24 மணி நேரமும் கண்காணிப்பு!

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் பறக்கும் படையை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி,நெல்லை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக என 7 கட்சிகள் களம் காண்கிறது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நாளையுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வாக்கிற்கு மூக்குத்தி,தங்கமோதிரம் குத்துவிளக்கு போன்ற பரிசுப் பொருட்கள் வேட்பாளர்கள் சார்பில் வழங்கப்படுவது தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், இதுபோன்ற பரிசுப் பொருட்கள் கொடுக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் ஒரு செயல் குற்றவியல் நீதிபதி மற்றும் இரண்டு காவலர்களைக் கொண்ட பறக்கும் படைகள் அமைக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மாவட்டம் தோறும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், மூன்று ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய தொகுப்பிற்கு ஒரு பறக்கும் படையை அமைக்க வேண்டும். உரிய ஆவணங்களின்றி 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் எடுத்துச் சென்றால் இந்த குழு பறிமுதல் செய்ய வேண்டும். பறக்கும் படைகளின் ஆய்வு, பறிமுதல் செய்யப்படும் நிகழ்வுகள் ஆகியவற்றை வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

செவ்வாய் 21 செப் 2021