மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 செப் 2021

சிறு, குறு தொழில்களை மீட்டெடுப்பதே அரசின் நோக்கம்: தங்கம் தென்னரசு

சிறு, குறு தொழில்களை மீட்டெடுப்பதே அரசின் நோக்கம்: தங்கம் தென்னரசு

பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில்முறையை மீட்டெடுப்பதே அரசின் நோக்கமாக உள்ளது என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் அவினாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ்நாடு மேற்கு மாவட்டங்களுக்கான தொழில் துறை வளர்ச்சி ஆலோசனைக் கூட்டம் இன்று (செப்டம்பர் 21) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். பல்வேறு தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழில் துறை அதிகாரிகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தொழில் கட்டமைப்புகளை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதில் பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “இக்கூட்டத்தில் பல அற்புதமான கருத்துக்களை பேசியிருக்கிறார்கள். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிக பேர் ஆர்வமுடன் வந்திருக்கிறார்கள். இரண்டு விஷயங்களை நான் பார்க்கிறேன். ஒன்று, நாடு எப்போதும் இல்லாத வகையில் பெருந்தொற்று காலத்தை கடந்து கொண்டிருக்கிறது. இந்த பெருந்தொற்று காலத்தில் தொழில் வளர்ச்சியின் நிலைமை எவ்வாறு இருக்கிறது, அதை எவ்வாறு நாம் மீட்டெடுக்க போகிறோம். இந்த சவாலான காலகட்டத்தில் தொழில் துறையை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மற்றொன்று புதிய தொழில்நுட்பம் காரணமாக புதிய தொழில்கள் வர தொடங்கியுள்ளது. அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோமா என்பதை பார்க்க வேண்டும். காலம் காலமாக பாரம்பரிய தொழிலில் உள்ளவர்களின் மேம்பாடு, தொழிற்துறையில் புதிதாக வருவோர்களின் மேம்பாடு என இருவேறு விவகாரங்களை முக்கியமாக பார்க்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசின் தொழில்துறை முன் உள்ளது. தொழிற்சாலைகள் பெரும்பாலும் சென்னை அதனை சுற்றியுள்ள இடங்களில்தான் வருகிறது. தூத்துக்குடி துறைமுகம் மேம்பாடு மூலம் கோவை போன்ற தொழிற் நகரங்கள் மிகுந்த பயனடையும்.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை ஊக்குவித்து பொருளாதாரத்தை வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில்துறையை மீட்டெடுப்பதே அரசின் நோக்கம். நீண்ட கால கோரிக்கையான ஏற்றுமதி கொள்கை ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. வரலாற்றுப் பாரம்பரியங்களை பாதுகாப்பதில் இந்த அரசு முனைப்பாக உள்ளது. மக்கள் கேட்கின்றவற்றை உடனடியாக செய்து தரும் அரசாக தமிழ்நாடு அரசு உள்ளது “ என்று கூறினார்.

-வினிதா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

செவ்வாய் 21 செப் 2021