மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 செப் 2021

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

செப்டம்பர் 17 ஆம் தேதி உத்திரப்பிரதேச தலைநகரம் லக்னோவில் கடந்த இருபது மாதங்களில் முதல் முறையாக நேரடியாக கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் செல்லவில்லை. இதுகுறித்து நிதியமைச்சரை விமரிசித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘கொழுந்தியா மகளின் வளைகாப்பு நிகழ்ச்சிதான் நிதியமைச்சருக்கு முக்கியமாகிவிட்டது’ என்று சாடியிருந்தார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர், “எனக்கு கொழுந்தியாவே கிடையாது. பொய் சொல்வதற்கும் குறைந்தபட்ச அறிவு வேண்டும்” என்று அண்ணாமலைக்கு பதில் கொடுத்தார்.

செப்டம்பர் 17ஆம் தேதியன்று மதுரையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தேதி கொடுத்திருந்தார் நிதியமைச்சர். அதற்கு முன்னதாக அந்த பிரஸ்மீட்டில் பேசிக் கொண்டிருக்கும்போது, ‘இங்கிருந்து வளைகாப்புக்கு செல்கிறேன்’ என்று மதுரை பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார். மதுரை பத்திரிகையாளர்களுக்கு அன்று சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது தெரியும். ஆனால் பாஜகவினர் வேண்டுமென்றே கொழுந்தியா மகளுக்கு வளைகாப்பு என்று நிதியமைச்சர் சொன்னதாக வாட்ஸ் அப்பில் கிளப்பிவிட, பிடிஆரின் பிரஸ்மீட்டை கூட பார்க்காமல் தனது கட்சியினரின் வாட்ஸ் அப் பரப்புரையை நம்பி பிரஸ்மீட்டிலும் முதல்வருக்கு எழுதிய கடிதத்திலும், ‘கொழுந்தியா பொண்ணுக்கு வளைகாப்பு அதனால் ஜிஎஸ்டி கூட்டத்துக்கு போகலை என்பது ஒரு நிதியமைச்சர் சொல்லக் கூடிய பதிலா?’ என்று கேட்டிருந்தார் அண்ணாமலை.

இதற்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்து, ’நிதியமைச்சர் சொல்லாத காரணத்தை சொல்லி அவரை இழிவுபடுத்தியதற்காக அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று தொடர்ந்து பதிவுகள் இட்டு, ‘ #மன்னிப்புகேள்_அண்ணாமலை’ என்பதை ட்விட்டரில் டிரண்டிங் ஆக்கியுள்ளனர்.

கவிஞர் சல்மா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு பொது சமுதாய நிகழ்ச்சியை, பாஜக தனது வழக்கமான பொய்யினால் அவதூறு பரப்பி வருகிறது! வாட்ஸப்பில் பரப்பப்படும் பொய் செய்திகளை அப்படியே ஊடகங்களின் முன்னாள் அமர்ந்து ஒப்பிக்கிற அண்ணாமலை அரசியல் வாழ்க்கைக்கே தகுதியற்றவர்...” என்று கூறியுள்ளார்.

மேலும், “மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கர்ப்பிணித் தாய்மார்களை, அவர்களுக்காக தமிழ்நாட்டு அரசு நடத்தும் சமுதாய வளைகாப்பு விழாவை இழிவாகப் பேசிய அண்ணாமலை, பாஜகவினர் மதுரை மக்களிடம் பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று மதுரையைச் சேர்ந்த திமுகவினர் உள்ளிட்ட பலர் சமூக தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

-வேந்தன்

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

செவ்வாய் 21 செப் 2021