மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 செப் 2021

அதிகாரங்களை போராடித்தான் பெற வேண்டியுள்ளது: கமல்

அதிகாரங்களை போராடித்தான் பெற வேண்டியுள்ளது: கமல்

உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருக்கிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த சுதந்திர தினத்தின் போது, கொரோனா காரணமாகக் கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த கமல், “கொரோனாவில் தேர்தல் நடக்கும், வாக்கு எண்ணிக்கை நடக்கும், பதவி ஏற்பு விழா நடக்கும், சட்டமன்றம் நடக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால், கிராம சபை மட்டும் நடக்காது. அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

முந்தைய ஆட்சியில் கிராம சபை நடத்தத் தொடுத்த வழக்கை திமுக ரகசியமாக வாபஸ் பெற்றுக் கொண்டபோதே இந்த அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம். திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது” என்று விமர்சித்திருந்தார்.

இதனிடையே, கிராம சபைக் கூட்டம் நடத்துவது தொடர்பாக, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒன்றியம் ராஜேந்திர பட்டினம் கிராம ஊராட்சித் தலைவர் சுரேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று (செப்டம்பர் 20) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் ஒன்பது மாவட்டங்களைத் தவிர, தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

அப்போது மனுதாரர் சார்பில், கிராம சபைக் கூட்டத்தைக் கூட்ட ஊராட்சி மன்றத் தலைவருக்கு மட்டும் அதிகாரம் உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் விருப்பத்தின்படியே கிராம சபை நடப்பது போன்ற சூழலை உருவாக்கியிருப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்று தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதுதொடர்பாக மநீம தலைவர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “கிராம சபைகளை நடத்தும் அதிகாரத்தில் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் தலையிட முடியாது என பஞ்சாயத்துத் தலைவர் ஒருவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் அதிகாரங்களைப் போராடித்தான் பெறவேண்டி இருப்பதன் அடையாளம் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.

-பிரியா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

செவ்வாய் 21 செப் 2021