மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 21 செப் 2021

மார்க்கண்டேயனாகவே இருக்கீங்க?: நடைபயிற்சியின் போது சுவாரஸ்யம்!

மார்க்கண்டேயனாகவே இருக்கீங்க?: நடைபயிற்சியின் போது சுவாரஸ்யம்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட போது, பொது மக்களிடம் இயல்பாகப் பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக, நடைபயிற்சி, மிதிவண்டி பயிற்சி, உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வார். வழக்கமாக நடைபயிற்சி அல்லது சைக்கிளில் பயிற்சி மேற்கொள்ளும் போது அங்குள்ள பொதுமக்களிடம் பேசுவதோ அல்லது குறைகளைக் கேட்டு அறிவதோ அவரது வழக்கம்.

அதுபோன்று இன்று காலை முதல்வர் ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் சென்னை அடையாறு தியாசஃபிகல் சொசைட்டி வளாகத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.

அப்போது நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்த பலரும் முதல்வரிடம் வந்து பேசினர். அங்கிருந்த பெண் ஒருவர் முதல்வரிடம் பேசுகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஏர்போர்ட்டில் வைத்து உங்களைப் பார்த்தேன். அப்போது நீங்கள்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என்று கூறினேன். மிகவும் பெருமையாக இருக்கிறது. ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

அப்போது அவர் கேட்ட கேள்வியும் அதற்கு முதல்வர் அளித்த பதிலும் அங்கிருந்தவர்களை கலகலப்பாக்கியது.

கடைசியாக ஒன்று கேட்கிறேன் சார், எப்படி சார் இப்படி மார்க்கண்டேயனாகவே இருக்கீங்க என்று அந்தப் பெண் கேள்வி எழுப்ப அதற்கு முதல்வர் தினமும் உடற்பயிற்சி செய்கிறேன் என்று பதில் கூறினார். இதனிடையே மற்றொரு பெண் முதல்வரின் பேரன் குறித்தும் பேசினார். கால்பந்து போட்டிக்காக சென்ற உங்கள் பேரன் நல்ல முறையில் விளையாட வேண்டும் என்று அவர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

முதல்வருடனான உரையாடலின் போது எடுக்கப்பட்ட இந்த வீடியோவை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதோடு பொதுமக்களிடம் இயல்பாகப் பேசிய முதல்வருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

செவ்வாய் 21 செப் 2021