மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 20 செப் 2021

நகையை அடகு வைக்காமலேயே கடன் வழங்கி மோசடி: ஐ.பெரியசாமி

நகையை அடகு வைக்காமலேயே கடன் வழங்கி மோசடி: ஐ.பெரியசாமி

அதிமுக ஆட்சியில் நகைகளை அடமானம் வைக்காமலேயே பல கோடி ரூபாய் நகைக் கடன் வாங்கி மோசடி நடந்துள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் நெல்லை மாவட்டப் பொறுப்பாளராக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தேர்தல் பணி தொடர்பாக நேற்று (செப்டம்பர் 19) நெல்லை மாவட்டத்துக்குச் சென்ற அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்து நான்கு மாதக் காலத்தில் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று மாதங்களாக அனைத்து நியாய விலை கடைகளிலும் தரமான அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆட்சியில் ரூ.25,000 கடன் வழங்க வேண்டிய நிலத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளனர். போலியான பயிரை காட்டியதோடு நிலத்தின் அளவையும் உயர்த்தி காட்டி கடனை வழங்கியுள்ளனர். பல சங்கங்களில் மோசடியாக கடன் வழங்கி அந்தக் கடனையே அவர்களுக்கு வைப்புத் தொகையாகச் செலுத்தியுள்ளனர். பயிர்க்கடன் தள்ளுபடிக்காக இதுபோன்ற மோசடி நடந்துள்ளது.

ஐந்து சவரனுக்குக் கீழ் நகைக் கடன் தள்ளுபடி வழங்க தமிழ்நாடு அரசு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், நகைக் கடனில் ஏராளமான தவறுகள் நடந்துள்ளன. ஒரே ஆதார் எண்ணைப் பயன்படுத்தி பல இடங்களில் பல லட்சம் ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது. நகைக் கடன் தள்ளுபடி பெறுவதற்காக நகைகளை அடகு வைக்காமலேயே நகைக் கடன் பெற்றுள்ளனர். பல்வேறு வங்கிகளில் கவரிங் நகைகள் வைத்து நகைக் கடன் பெறப்பட்டுள்ளது. இதுபோன்று தூத்துக்குடி, நாமக்கல், மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி எனப் பல்வேறு மாவட்டங்களிலும் முறைகேடாக நகைக் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதனால், கடந்த காலங்களில் நடைபெற்ற முறைகேடுகள் கண்டறியப்பட்ட பின்பு, தகுதியுள்ள உரிய ஏழை, எளிய மக்களுக்குக் கடன் தள்ளுபடி செய்யப்படும். எவ்வளவு முறைகேடு நடந்திருக்கிறது என்பதை சொல்ல முடியாது. ஏனெனில், கிலோ கணக்கில் நகைக் கடன் மோசடி நடந்துள்ளது.

மொத்தமுள்ள 4,451 கூட்டுறவு கடன் சங்கங்களில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஆய்வுக்குப் பிறகு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மோசடி செய்தவர்கள்மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கடந்த ஆட்சியில் முறைகேடுகள் புற்றுநோய் போல் வளர்ந்துள்ளது. அவர்கள் கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்தவில்லை. கூட்டுறவு கடன் சங்கங்களை நான்கு மாதங்களுக்குள் மத்திய கூட்டுறவு வங்கிகளுடன் இணைக்கப்படும். அப்போதுதான் முறைகேடுகளைத் தடுக்க முடியும். கூட்டுறவுத் துறையில் உள்ள 3,999 காலியிடங்கள் வெளிப்படைத் தன்மையுடன் விரைவில் நிரப்பப்படும். தேர்தல் ஆணையம் தங்கள் செளகரியத்துக்காக இரண்டு கட்டங்களாகத் தேர்தலை நடத்துகிறது. உள்ளாட்சித் தேர்தலில் எந்த முறைகேடும் இல்லாமல் நியாயமான முறையில் நடைபெறும். மிக விரைவில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் நடத்துவது தொடர்பாக முடிவு செய்யப்படும்” என்று கூறினார்.

-வினிதா

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

திங்கள் 20 செப் 2021