மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 20 செப் 2021

அதானி துறைமுகம்: முருகனிடம் மீனவர்கள் கோரிக்கை!

அதானி துறைமுகம்: முருகனிடம் மீனவர்கள் கோரிக்கை!

அதானி துறைமுகம் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் என ஒன்றிய மீன்வளத் துறை இணையமைச்சர் எல்.முருகனிடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் ஒன்றிய மீன்வளத் துறை இணையமைச்சர் எல்.முருகன் மீனவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, மீனவர்களிடம் அவர் குறைகளைக் கேட்டறிந்தார். பல்வேறு மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து ஒன்றிய இணையமைச்சரிடம் மனுக்களை அளித்தனர்.

கடலும், ஏரியும் இணையும் முகத்துவாரம் மணல் திட்டுக்களால் தூர்ந்துபோவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் நிரந்தர முகத்துவாரம் அமைத்து தர வேண்டும். பல்வேறு தொழிற்சாலைகளால் மீன்வளம் அழிந்துள்ள நிலையில் அதானி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டால் கடலரிப்பைத் தடுக்க அதானி துறைமுகத்தை விரிவாக்கம் செய்வதற்கான திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று மீனவர்கள் கேட்டுக் கொண்டனர்.

மேலும், மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும், சுற்றுலாத்தலமாக மேம்படுத்தி படகு சவாரியை முறைப்படுத்தி தர வேண்டும், பெண்களை பாதிக்கும் வகையில் உள்ள டாஸ்மாக் கடையை ஊருக்கு ஒதுக்குபுறமாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அமைச்சரிடம் வைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் முருகன் கூறுகையில், “முகத்துவாரம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மத்திய, மாநில குழுக்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ள நிலையில் முகத்துவாரம் அமைக்கப்பட்டதாக கருத்தில்கொள்ள வேண்டும். விரைவில் பணிகள் முடிக்கப்படும்.

காசிமேடு மீன்பிடி துறைமுகம் சர்வதேச தரத்தில் நவீன மயமாக்கப்பட்டு மீன்பிடி துறைமுகமாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பழவேற்காடு மீன்பிடி துறைமுகம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும். கடல்பாசி தேவை அதிகரித்திருப்பதால் அதை அபிவிருத்தி செய்ய தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கப்பட உள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்குவது, வருமானத்தைப் பெருக்குவது ஒன்றிய அரசின் இலக்காக உள்ளது. பிரதம மந்திரி திட்டத்தில் அனைவருக்கும் வீடு வழங்குவதில் இலக்கு உள்ளது. கிஸான் கிரெடிட் கார்டு மீனவர்களுக்கு வழங்க திட்டம் தீட்டப்பட்டு வருகிறது” என்றார்.

இதனிடையே அதானி துறைமுகம் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை தொடர்பாக ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் எந்த கருத்தும், உத்தரவாதமும் தெரிவிக்காமல் புறப்பட்டுச் சென்றது மீனவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

-ராஜ்

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

திங்கள் 20 செப் 2021