மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 20 செப் 2021

வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

தமிழ்நாட்டிற்கு வாரந்தோறும் 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மக்களை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றும் நோக்கில் தடுப்பூசி செலுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் தடுப்பூசி செலுத்தி வந்தாலும், மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இரண்டுமுறை மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால், இன்று தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டிற்கு வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று(செப்டம்பர் 20) கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,” தமிழ்நாட்டுக்கு இதுவரை போதிய தடுப்பூசிகளை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி. எனினும் தடுப்பூசி போடுவதில் தேசிய சராசரியை விட தமிழ்நாடு குறைவாகவே உள்ளது. தடுப்பூசி போடத் தொடங்கிய முதல் 4 மாதங்களில் குறைவாக போட்டதாலேயே தமிழ்நாட்டின் சராசரி குறைவாக உள்ளது. ஏனெனில், மற்ற மாநிலங்களை போன்று தமிழ்நாட்டிற்கு மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகள் வழங்கப்படுவதில்லை. கடந்த கால பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் கூடுதலாக தடுப்பூசியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தினசரி தடுப்பூசி முகாமுடன், இரண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. செப்டம்பர் 12ஆம் தேதி நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம் மூலம் 28.91 லட்சம் பேருக்கும், செப்டம்பர் 19ஆம் தேதி நடத்தப்பட்ட முகாம் மூலம் 16.43 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியைத் தாண்டியுள்ளது.

தமிழ்நாட்டில், அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வாரத்தின் 6 நாட்களும் தினசரி 5 லட்சம் பேருக்கும், ஏழாவது நாளில் 20 லட்சம் பேருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளது. அதனால், தமிழ்நாட்டில் தடுப்பூசி தேவை அதிகமாக உள்ளது. அதற்கு வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும். இதுகுறித்து விரைவில் பிரதமர் நல்ல முடிவு எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

திங்கள் 20 செப் 2021