மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 20 செப் 2021

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அக்.2ல் கிராம சபைக் கூட்டம்!

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அக்.2ல் கிராம சபைக் கூட்டம்!

அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் காந்திஜெயந்தி, சுதந்திரதினம், குடியரசு தினம், உழைப்பாளர் தினம் ஆகிய நான்கு தினங்களில் கிராமசபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கிராம சபைக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் இயற்றப்படும்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று காரணமாக கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் கூட கிராம சபைக் கூட்டம் நடத்த தடை என திமுக அரசு அறிவித்தது. இதற்கு கமல் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு இன்று(செப்டம்பர் 20) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கிராம சபைக் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம்.

மாவட்ட ஆட்சியர்கள் இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகளை கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்க வேண்டும்.

கிராம சபைக் கூட்டத்தை முடிந்தவரை திறந்த இடங்களில் நடத்த வேண்டும். கிராம சபை நடத்துவதற்கு முன், இடத்தை முழுமையாக சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.

கூட்டம் நடைபெறும் இடம் திறந்தவெளி போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சாமியானா கூடாரத்தால் மூடப்பட்டிருக்க வேண்டும். கிராம சபை தொடங்குவதற்கு முன், அதில் பங்கேற்க வருபவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். அதிக வெப்பநிலை இருக்கும் நபர்களை, கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது.

14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கிராம சபையில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது.

கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் (இருமல், காய்ச்சல், சளி) கிராம சபையில் பங்கேற்க அனுமதிக்கப்படக்கூடாது.

கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கிராம சபையில் பங்கேற்க அனுமதி கிடையாது.

குறைந்தபட்சம் 6 அடி இடைவெளியுடன் மக்கள் உட்கார வேண்டும் மற்றும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கூட்டம் நடைபெற வேண்டும். அதற்குள் நிகழ்ச்சி நிரல்களை எடுத்து விவாதிக்க வேண்டும்.

கிராம பஞ்சாயத்து அல்லது கிராம பஞ்சாயத்தின் குறிப்பிட்ட பகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டால், கிராம சபைக் கூட்டத்தை பிற்காலத்தில் நடத்திக் கொள்ளலாம்.

பஞ்சாயத்து இன்ஸ்பெக்டரின் எழுத்துப்பூர்வ அனுமதி பெற்ற பின்னரே இந்த விதிமுறையைப் பயன்படுத்த வேண்டும்.

மேலும், மாவட்ட ஆட்சியர்கள் அவ்வப்போது அரசாங்கத்தால் வழங்கப்படும் நிலையான நெறிமுறைகளை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

சசிகலா விவகாரம்: பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை! ...

7 நிமிட வாசிப்பு

சசிகலா விவகாரம்:   பன்னீருக்கு முனுசாமி மூலமாக எடப்பாடி எச்சரிக்கை!

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

4 நிமிட வாசிப்பு

ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்கும் பிஜிஆர்: அண்ணாமலையின் பதில்!

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

7 நிமிட வாசிப்பு

துரைமுருகனுக்கு செக்: ஆலங்காயத்துக்கு மறு தேர்தல்?

திங்கள் 20 செப் 2021