மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 20 செப் 2021

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

தமிழ்நாட்டில் மீதமிருந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் வரும் அக்டோபர் 6, 9 தேதிகளில் நடைபெற இருக்கும் நிலையில்... நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் ஏழு மாத அவகாசம் கேட்டு மனு செய்திருந்தது.

அந்த மனு மீதான விசாரணை இன்று செப்டம்பர் 20 உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி இருந்தார்.

எடுத்த எடுப்பிலேயே தலைமை நீதிபதி, "தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு என்னாயிற்று? ஏற்கனவே உங்களுக்கு மூன்று முறைக்கு மேல் அவகாசம் கொடுத்தாயிற்று. இன்னமும் எதற்காக தேர்தல் நடத்தாமல் இழுத்தடிக்கிறீர்கள்?" என்று கோபமாகக் கேட்டார்.

அப்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, "நீதிபதி அவர்கள் இந்த மனுவை பொறுமையாகப் படித்துப் பார்க்க வேண்டும். கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் நடவடிக்கைகளை நடத்த முடியவில்லை. எங்களுக்கு 7 மாத அவகாசம் கூட வேண்டாம். அதில் பாதி அளவாக மூன்று முதல் 4 மாத அவகாசம் கூட போதுமானது. அதற்குள் நாங்கள் நகராட்சி தேர்தலை நடத்தி முடித்து விடுகிறோம்" என்று கூறினார்.

அப்போது தலைமை நீதிபதி, "சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களை எல்லாம் சரியான நேரத்தில் நடத்த முடிகிறபோது உள்ளாட்சித் தேர்தல்களை மட்டும் ஏன் குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்த முடியவில்லை? இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் புதிய பிரமாண பத்திரத்தை இன்னும் இரண்டு நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இனிமேலும் அவகாசம் கோராமல் உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும்" என்று கண்டிப்பான குரலில் உத்தரவிட்டார்.

இதையடுத்து தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் நகராட்சி மாநகராட்சி தேர்தல் நடத்துவதற்கான புதிய பிரமாணப் பத்திரத்தை விரைவில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கோபத்தை பார்த்தால் அநேகமாக இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் தமிழ் நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிகிறது.

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

திங்கள் 20 செப் 2021