மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 20 செப் 2021

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தேர்தலில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தின் தலைவரான பங்காரு அடிகளாரின் மனைவி மீண்டும் போட்டியிடுவது கவன ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆதிபராசக்தி அம்மன் வழிபாடு முறையை பிரபலப்படுத்தி ஒவ்வொரு ஊரிலும் செவ்வாடை பக்தர்களை வைத்திருப்பவர் பங்காரு அடிகளார். சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தல்களின்போது இவரது ஆதரவை கேட்டு முக்கிய கட்சிகளும் வேட்பாளர்களும் வேண்டுகோள் வைப்பது தான் இதுவரை நடந்திருக்கிறது. ஆனால் கடந்த பத்தாண்டுகளுக்குப் பிறகு இந்த முறை உள்ளாட்சி தேர்தலில் பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கும்... அவரது மகன் செந்தில் மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும் போட்டியிடுவது செவ்வாடை பக்தர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட சித்தாமூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல் மருவத்தூர் கிராம ஊராட்சியின் இரண்டாவது வார்டில் சுயேச்சை வேட்பாளராக பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி போட்டியிடுகிறார். அவரது மகன் நேரடியாக ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இந்த இரு பதவிகளுக்குமே கட்சி அடிப்படையான தேர்தல் கிடையாது.

ஆன்மீக உலகமே அம்மா என்று அழைக்கும் அடிகளாரின் குடும்பத்தில் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் ஏன் போட்டியிட வேண்டும்?

செங்கல்பட்டு மாவட்ட செவ்வாடை (கம்யூனிஸ்ட்) தோழர்கள் சிலர் நம்மிடம் பேசினார்கள்.

"மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் கோவிலை மட்டுமன்றி பல்வேறு கல்வி நிலையங்களையும் நடத்துகிறது. இவர்கள் கட்டிய திருமண மண்டபம், பார்க்கிங் இடம் உள்ளிட்டவை நீர்நிலைகளை தூர்த்து கட்டப்பட்டதாக பல ஆண்டுகளுக்கு முன்பே புகார்கள் எழுந்தன. ராஜா என்பவர் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பங்காரு அடிகளாரின் ஆக்கிரமிப்புகளை மீட்குமாறு போராட்டங்கள் நடத்தினர்.

அண்மையில் ஜேப்பியார் கல்வி நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு மீட்டதைப் போல மேல்மருவத்தூர் ஆக்கிரமிப்புகளையும் மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சூழலில் தான் உள்ளாட்சி மன்ற

அதிகாரத்தை தங்கள் கையில் எடுக்க வேண்டும் என்பதற்காக பங்காரு அடிகளாரின் மகன் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும் அவரது அம்மா ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் பதவிக்கும் குறிவைத்து மீண்டும் இந்தத் தேர்தலில் இறங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் எதிர்ப்பின்றி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட வேண்டும் என்ற நோக்கத்தில் மேல் மருவத்தூர் ஊராட்சி மன்றத்தில் காய் நகர்த்தி வருகிறார்கள் கோவில் தரப்பினர்" என்கிறார்கள்.

இதுதொடர்பாக மேல்மருவத்தூர் பக்தர்கள் சிலரிடம் பேசினோம்.

"ஆதிபராசக்தி மன்றத்தின் இந்த ஆன்மீக அரசியல் எங்களுக்கு வேதனை தருகிறது. ஏற்கனவே பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றி வரும் நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட்டு பதவிக்கு வரும் அவசியம் இப்போது என்ன வந்தது?" என்கிறார்கள் லட்சுமி, மாலதி ஆகிய பக்தர்கள்.

வேந்தன்

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

திங்கள் 20 செப் 2021