மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 19 செப் 2021

மோடி பிறந்தநாளால் தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு?

மோடி பிறந்தநாளால் தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு?

தமிழ்நாட்டில் இன்று(செப்டம்பர் 19)இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சுமார் 40 ஆயிரம் மையங்கள் மூலம் ஒரேநாளில் 28.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாக 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும், அடுத்த தடுப்பூசி முகாம் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

ஆனால், மெகா தடுப்பூசி முகாம் நடத்தக் கூடிய அளவுக்கு தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால் தடுப்பூசி முகாம் செப்டம்பர் 17ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று 20 ஆயிரம் மையங்கள் மட்டும் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உதாரணத்துக்கு காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு 40 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 10 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் வந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடியவில்லை. அதுபோன்று கடலூரிலும் போதிய தடுப்பூசிகள் இல்லாததால், தடுப்பூசி செலுத்த வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பெரும்பாலான இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசிக்குதான் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவிஷீல்டு இரண்டாவது டோஸ் செலுத்த வந்த மக்கள் தடுப்பூசி இல்லாததால் திரும்பி சென்றனர். பெரும்பாலான இடங்களில் பெயரளவுக்கு மட்டுமே தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் திடீரென்று தடுப்பூசிக்கு ஏன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து விசாரித்தபோது, “பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்தநாள் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டன. அதன்மூலம் ஒரே நாளில் 2 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதுபோன்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கைத் தாண்டி 2.5 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி உள்பட பலரும் பாராட்டுகளை தெரிவித்திருந்தனர்.

ஆனால், பிரதமர் மோடி பிறந்தநாளில் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமிற்கு தமிழ்நாடு அரசு அந்தளவுக்கு ஆர்வம் காட்டவில்லை. மாநில அளவில் நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாமுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் இதற்கு அளிக்கப்படவில்லை.

அதனால் தமிழ்நாடு அரசு அறிவித்த இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாமை தோல்வி அடைய வைப்பதற்காக ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு போதிய தடுப்பூசிகளை வழங்கவில்லை. சென்னையில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான தடுப்பூசி சென்டரில் போதுமான தடுப்பூசிகள் இருந்தும், தமிழ்நாட்டுக்கு கொடுக்கப்படவில்லை. இது ஒன்றிய அரசின் பழி வாங்கும் நடவடிக்கை” என்று காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் கூறினார்.

-வணங்காமுடி, வினிதா

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

ஞாயிறு 19 செப் 2021