மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 19 செப் 2021

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்: சிவாச்சாரியர்கள் சங்கத்தினர் போராட்டம்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்: சிவாச்சாரியர்கள் சங்கத்தினர் போராட்டம்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சிவாச்சாரியார் சமூக நலச் சங்கத்தினர் வள்ளுவர் கோட்டத்தில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கொண்டு வந்தாலும், தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில்தான் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் முதற்கட்டமாக, 5 தலித்துகள் உட்பட வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த 58 பேரை அர்ச்சகர்களாக நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். தற்போது இவர்கள் தாங்கள் நியமனம் செய்யப்பட்ட கோயில்களில் பணியாற்றி வருகிறார்கள்.

இந்த திட்டத்திற்கு வரவேற்பு கிடைத்ததுபோன்று, எதிர்ப்புகளும் கிளம்பியது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீதரன் மற்றும் சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் ஆகியோர் தரப்பில் வெவ்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு சிவாச்சாரியர் சமூக நல சங்கத்தினர் வள்ளுவர் கோட்டத்தில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

சிவாச்சாரியார் சமூகநல சங்கத்தின் தலைவர் சுரேஷ் பேசுகையில்,” தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஆகம விதிமுறையை மீறாமல், பராம்பரிய முறையை பின்பற்ற வேண்டும். வேத ஆகமங்களை முறைப்படி படித்த சிவாச்சாரியார்களை மட்டுமே பூஜை செய்யும் பணிகளில் பணியமர்த்த வேண்டும். தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில், வெள்ளி, சனி,ஞாயிறு ஆகிய நாட்களில் கோயில்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடையை நீக்க வேண்டும். இந்து அறநிலையத் துறை ஆகம பூஜைகளில் தலையிடக் கூடாது. மத வழிபாடுகளில் அரசாங்கம் தலையிடக் கூடாது. நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பை எங்களுக்கு வழங்க வேண்டும்” என்று கூறினார்.

-வினிதா

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்! ...

8 நிமிட வாசிப்பு

உத்தரவை மீறிய அதிகாரிகள்: களத்தில் இறங்கிய தலைமைச் செயலாளர்!

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்: கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த ...

9 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: இலாகா மாற்றம்:  கண்ணப்பனுக்கு முதல்வர் வைத்த செக்!

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

15 நிமிட வாசிப்பு

பலித்துவிடுமா வேத விஞ்ஞானம் !

ஞாயிறு 19 செப் 2021